ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடம் நாட்ராக்ஸ் (NATRAX) ஆசியாவின் மிக நீளமான மற்றும் உலகின் ஐந்தாவது மிக நீளமான அதிவேக வழித்தடமான நாட்ராக்ஸ் (NATRAX) இந்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்திலான 11.3 கிலோ மீட்டர் அதிவேக வழித்தடம் ஜூன் 29, 2021 அன்று தொடங்கப்பட்டது. சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட நாட்ராக்ஸ், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக டிராக்டர் டிரெய்லர்கள் வரையிலான பல்வேறு வகை வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்கான ஒரே தளமாக விளங்கும். அதிகபட்ச வேக அளவீடுகள், நிலையான எரிவாயு பயன்பாட்டு வேகம், மாசு வெளியீட்டு சோதனைகள் போன்ற பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் நாட்ராக்ஸ் மையத்தில் இடம் பெற்றிருப்பதுடன், வாகன இயக்கவியலுக்கான தலைசிறந்த மையமாகவும் இது செயல்படும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள நாட்ராக்ஸ் (NATRAX) இணையதளத்தை பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்