மத்திய அமைச்சரவை இந்தியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும் [Institute of Chartered Accountants of India (ICAI)] இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும் [The Institute of Chartered Accountants in England & Wales (ICAEW)] இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு [Memorandum of Understanding (MoU)] ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்களின் கல்வித்தகுதி மற்றும் பயிற்சியில் ஒன்றுடன் ஒன்று அங்கீகாரம் வழங்கவும், தற்போதுள்ள விதிமுறைகள் குறித்த இணைப்பு நடைமுறை மூலம் உறுப்பினர்களை அனுமதிப்பதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் தங்களின் கல்வித்தகுதி மற்றும் சேர்க்கை தேவைகளுக்கான தகவல் பரிமாற்றம், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுக் கொள்கை, விதிவிலக்குகள் மற்றும் இதர பொருத்தமான விஷயங்களில் மாற்றங்கள் செய்வதற்கும் இது வழிவகுக்கிறது. இந்த நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, இந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு பிரிட்டனில் அதிகபட்ச தொழில் வாய்ப்புகளை வழங்குவதுடன், பிரிட்டனில் உள்ள உலகளாவிய தொழில் வாய்ப்புகளையும் வழங்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்