பாதுகாப்புத்துறையில், தற்சார்பை அடையும் மற்றொரு நடவடிக்கையாக பிப்ரவரி 6, 2023 அன்று தும்கூருவில் (Tumakuru), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெல்காப்டர் தொழிற்சாலையை [Hindustan Aeronautics Limited (HAL)] பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 2016-ஆம் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பசுமை ஹெலிகாப்டர் தொழிற்சாலை மூலம் ஹெலிகாப்டர்களின் உற்பத்தித் திறன் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படையும். இது ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையாகும். அடுத்த 20 ஆண்டுகளில், தும்கூருவில், 3 முதல் 15 டன் தரம் உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் சுமார் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்