இ-ஷ்ரம் (eShram) இணையதளத்தில் புதிய அம்சங்கள் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் ஏப்ரல் 24, 2023 அன்று தொடங்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான புதிய அம்சம் இந்த இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது குழந்தைகளுக்கு எளிதில் கல்வி வழங்குவதற்கான வாயப்புகள் ஏற்படும். அமைப்பு சாரா தொழிலாளார்கள் இந்த தளத்தில் எளிதில் பதிவு செய்யும் வகையில் இந்த தளம் தற்போது மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு தகவல்கள், தொழில் பழகுநர் பயிற்சிகள், திறன் மேம்பாடு, ஓய்வூதிய திட்டங்கள் போன்றவை குறித்து இனி மேலும் எளிதில் அறிந்துகொள்ள இயலும். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தளத்தில் 2023 ஏப்ரல் 21-ஆம் தேதி வரை 28.87 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்