சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஆண்டுதோறும் சிறுதானியங்கள் உற்பத்திக்கான இலக்கை நிர்ணயிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான ஊட்டச்சத்து தானியங்களின் பயிர் வாரியான, மாநில வாரியான மற்றும் பருவம் வாரியான இலக்குகளை மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 205 லட்சம் டன் ஊட்டச்சத்து தானியங்கள் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்கு கரிஃப் பருவத்தில் 8.70 லட்சம் டன், ரபி பருவத்தில் 2 லட்சம் டன் என மொத்தம் 10.70 லட்சம் டன்னாகும். இது தவிர கரிஃப் பருவத்தில் 3.10 லட்சம் டன், ரபி பருவத்தில் 2 லட்சம் டன் என மொத்தம் 5.10 லட்சம் டன் சோளம் உற்பத்திக்கும், கரிஃப் பருவத்தில் 1.70 லட்சம் டன் தினை உற்பத்திக்கும், 3.40 லட்சம் டன் கேழ்வரகு உற்பத்திக்கும், 0.50 லட்சம் டன் சிறு தானியங்கள் உற்பத்திக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் 14 மாநிலங்களில் உள்ள 212 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவிலான அனுமதிக் குழுவின் ஒப்புதலுடன் தேசிய விவசாயிகள் நலத்திட்டத்தின் கீழ் - விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை மறுமலர்ச்சிக்கான ஊதிய அணுகுமுறைகளின்படி மாநிலங்களின் சிறுதானியங்கள் சாகுபடியை மாநில அரசுகள் ஊக்குவிக்கலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்