அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் [Council of Scientific & Industrial Research (CSIR)] "ஒரு வாரம், ஒரு ஆய்வகம்" (One Week, One Lab) என்னும் நாடு தழுவிய பிரச்சாரம் ஜனவரி 6 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ள அவர், புதுதில்லியில் உள்ள அறிவியல் மையத்தில் கவுன்சிலின் 200வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றினார். “ஒரு வாரம் ஒரு ஆய்வகம்” என்ற கருப்பொருள் அடிப்படையிலான பிரச்சாரம் இளம் கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள், ஸ்டார்ட்-அப்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்