கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் - சஹாரா ரீஃபண்ட் இணையப்பக்கத்தை (CRCS - Sahara Refund Portal) https://mocrefund.crcs.gov.in/ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். நான்கு கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட சஹாரா குழுமத்தின் உண்மையான டெபாசிட்தாரர்கள் உரிமை கோரல்களை சமர்ப்பிப்பதற்காக இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சஹாரா குழுமத்தில், பணம் செலுத்தி திரும்ப பெற முடியாதவர்களின் கவலையை மனதில்கொண்டு இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் ரூ.10,000 அல்லது அதற்கும் கூடுதலாக டெபாசிட் செய்துள்ள 1 கோடி முதலீட்டாளர்களுக்கு இந்த இணையப்பக்கத்தின் மூலம் முதல் தவணையாக ரூ. 10,000 வரை வழங்கப்படும். சஹாரா குழும நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் இணையதளம் மூலம் இந்த இணையப்பக்கத்தை அணுகி அதில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்துடன் தேவைப்படும் ஆவணங்களையும், பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிமைகோரல்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆதார் அட்டை மூலம் சரிபார்க்கப்பட்ட பின், நிதி இருப்பைப் பொறுத்து, உண்மையான டெபாசிட்தாரர்களுக்கு 45 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்