மத்திய ஆயுர்வேத அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ தேசிய ஆணையம் [National Commission for Indian System of Medicine (NCISM)], ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் [Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS)] மற்றும் மத்திய ஆயுஷ்அமைச்சகம் (Ministry of Ayush) சார்பில் ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில், ஸ்மார்ட் திட்டத்தை [Scope for Mainstreaming Ayurveda Research in Teaching Professionals (SMART)] உருவாக்கியுள்ளன. நாடு முழுவதும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் வாயிலாக, சுகாதார ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இந்தத் திட்டத்தை இந்திய மருத்துவ தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சிலின் இயக்குநர் ஆகியோர் புதுதில்லியில் சனவரி 2, 2023 நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்