பன்முனை இணைப்புக்கான அதிவிரைவுத் திட்டம் என்னும் தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் இன்று அமைக்கப்படுகிறது. பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம், தற்சார்பு இந்தியா வாக்குறுதிக்கான இந்தியாவின் நம்பிக்கையை பெறும். இந்தப் பெருந்திட்டம் 21ஆம் இந்தியாவின் நூற்றாண்டுக்கு அதிவிரைவு சக்தியை அளிக்கும் என்று பிரதமர் கூறினார். இந்திய மக்கள், இந்திய தொழில்துறை, இந்திய வர்த்தகம், இந்திய உற்பத்தியாளர்கள், இந்திய விவசாயிகள் ஆகியோர் இந்த அதிவிரைவு சக்தி பிரச்சாரத்தின் மையமாக உள்ளனர் என பிரதமர் வலியுறுத்தினார். 21ம் நூற்றாண்டு இந்தியாவை உருவாக்க இந்த அதிவிரைவு சக்தித் திட்டம் தற்போதைய, எதிர்கால தலைமுறைக்கு புதிய சக்தியை அளிக்கும் மற்றும் அவர்களின் பாதையில் உள்ள தடைகளை அகற்றும் எனப் பிரதமர் கூறினார். பெரிய திட்டம் மற்றும் சிறிய அமலாக்கத்திற்கு இடையே உள்ள இடைவெளி காரணமாக ஒருங்கிணைப்புக் குறைபாடு, மேம்பட்ட தகவல், சிந்தனை குறைபாடு மற்றும் மந்த கதியிலான வேலை போன்ற பிரச்சினைகள் கட்டுமானங்களுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன மற்றும் நிதியும் வீணாகிறது என்று பிரதமர் கூறினார். சக்தி அதிகரிப்பதற்குப் பதிலாக பிரிக்கப்படுகிறது என அவர் கூறினார். இப்பிரச்சினைக்கு பிரதமரின் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் தீர்வு காணும் என பிரதமர் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக தாமதங்களை தவிர்ப்பதில் தற்போது கவனம் செலுத்தப்படுவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். முழு அரசு அணுகுமுறையுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் ஒட்டுமொத்த சக்தியும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். இதன் காரணமாக பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். பிரதமரின் அதிவிரைவு சக்தி பெருந்திட்டம், அரசின் நடைமுறைகளை பலதரப்பினருடன் ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல் பலவகையான போக்குவரத்தையும் ஒருங்கிணைக்க உதவுகிறது. இதுதான் முழுமையான ஆளுகையின் நீட்டிப்பு என அவர் தெரிவித்தார். தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் வர்த்தகத் தலைநகராக மாறும் கனவை இந்தியா அடையும் என பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார். நமது இலக்குகள் அசாதாரணமானவை மற்றும் இதற்கு அசாதாரணமான முயற்சிகள் தேவை என்று பிரதமர் கூறினார். இந்த இலக்குகளை அடைய பிரதமரின் அதிவிரைவு சக்தித் திட்டம் மிக உதவிகரமாக இருக்கும். அரசின் உதவிகளைப் பெறுவதில் தன்ஜன், ஆதார் , செல்போன் ஆகிய மூன்றும் புரட்சியை ஏற்படுத்தியது போல் பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டமும் உள்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என அவர் கூறினார். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்