தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தொடர்பான "மக்கள் ஜி20" (People’s G20) என்ற மின்நூலை புதுதில்லியில் 18 செப்டம்பர் 2023 அன்று வெளியிட்டார். இந்த நூல் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் முழுமையான பயணத்தை முன்வைக்கிறது. இந்த புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி, புதுதில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்ற மாபெரும் ஜி20 உச்சிமாநாட்டைப் பற்றியதாகும். இரண்டாவது பகுதி பல்வேறு பணிக்குழுக் கூட்டங்கள் தொடர்பான சுருக்கத் தகவல்களையும், இந்தியா தலைமைத்துவப் பொறுப்பேற்றதிலிருந்து கூட்டங்கள் தொடர்பான சுருக்கமான தகவல்களையும் வழங்குகிறது. இந்த மின்நூலின் கடைசிப் பகுதியில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தை மக்கள் பங்களிப்பு கொண்ட இயக்கமாக மாற்றி நாடு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் கூடிய கட்டுரைத் தொகுப்புகளை வழங்குகிறது. பின்வரும் இணைய தள இணைப்பில் இந்த மின் நூலைப் படிக்கலாம்: https://static.pib.gov.in/WriteReadData/userfiles/People_g20_flipbook/index.html ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்