மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தால் வெளிநாட்டு வர்த்தக் கொள்கை 2023 (Foreign Trade Policy 2023) மார்ச் 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. நீண்ட காலமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, மாறிவரும் தேவைகளுக்கேற்ப இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஏற்கனவே 750 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு அது 760 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கத்தொகைகள், ஒருங்கிணைந்த முறையில் ஏற்றுமதி மேம்பாடு, வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல், மின் வணிகத்தை மேம்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்