104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள 24 மணி நேரமும் டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னையில் செயல்பட்டு வருகிறது. 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் வாயிலாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதே போன்று 14416 அழைப்பு மையம் (நட்புடன் உங்களோடு மனநல சேவை) மன அழுத்தத்தில் இருந்து விடுபெற்று மனநல ஆலோசனை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீட் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு, 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு 14416 - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் தொடங்கப்பட்டது. 2022-2023 கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை சேவைகள் வழங்கும் செயல்முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. இதனடிப்படையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மனநலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்படும். இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 104-தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416- நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம், சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மனநல ஆலோசகர்கள் 3 சுழற்சிமுறையில் செயல்படுவர். 104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் 10 இருக்கைகளுடன் டி.எம்.எஸ் வளாகம் 30 மனநல ஆலோசகர்களைக் கொண்டும், 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10 இருக்கைகளுடன் மனநல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மனநல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது. 14416 நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் சேவை மையமானது அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னையில் 10 இருக்கைகளுடன் 30 மனநல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மற்றும் 1 மனநல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9