தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் உறுப்பினர்களின் பணிக்கு ஆபத்து ஏற்படும் போது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தற்போது இன்னும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பணியாளரை பணியை விட்டு அனுப்புவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை தொழிலாளர் அரசு காப்பீட்டு கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்தவில்லை என்றாலும், அந்த காலத்திற்கான காப்பீடும் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி உறுப்பினர்களின் ஊதியத்தில் சராசரியாக 50 சதவீத தொகை 90 நாட்களுக்கு அவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.