ஆபத்தான பொருள்களை எடுத்துச் செல்வதில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு விதிமுறைகளை நாட்டின் மிக முக்கியமான தர நிர்ணய அமைப்பான இந்தியத் தரநிர்ணய அமைவனம் [Bureau of Indian Standards (BIS)] அண்மையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. ஐஎஸ் 18149:2023-ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து-விதிமுறைகள் (IS 18149:2023 - Transportation of Dangerous Goods - Guidelines) என அறியப்படும் இவை போக்குவரத்து சேவைகள் பிரிவுக்கான குழுவால் உறுவாக்கப்பட்டவை. இந்த விதிமுறைகள் ஆபத்து விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் கையாள்வதற்கும் கொண்டு செல்வதற்கும் புதிய நிலையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிமருந்துகள், எரிவாயுக்கள், எளிதில் தீப்பற்றும் திரவங்கள், எளிதில் தீப்பற்றும் திடப்பொருட்கள் போன்றவை ஆபத்தான பொருட்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை பேக் செய்தல், லேபில் ஒட்டுதல், ஆவணப்படுத்துதல், பயிற்சி, பொருள் கொண்டு செல்லுதல், அவசரகால செயல்பாடு, பிரித்து வைப்பதற்கான ஏற்பாடு போன்றவை இந்த விதிமுறைகளில் அடங்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்