நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான நிகழ்வாக ஆயுஷ்மான் பவ இயக்கம் தொடங்கப்படுகிறது. குடியரசுத்தலைவர் 13.09.2023 அன்று 'ஆயுஷ்மான் பவ' இயக்கத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கம் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு [Universal Health Coverage (UHC)] அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்படும் 'ஆயுஷ்மான் பவ' இயக்கம், ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன்முயற்சியாகும். இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தில் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது சுகாதாரத் துறை, பிற அரசுத் துறைகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராம பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். புவியியல் தடைகளைத் தாண்டி, ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திற்கு விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், யாரும் பின்தங்கிவிடாமல் அனைவருக்கும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்