மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக புத்தகக் கண்காட்சி 2023 இல் இந்திய அரசின் கூடுதல் செயலர் ஸ்ரீ சஜ்ஜன் சிங் யாதவ் எழுதிய 'இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை' (India’s Vaccine Growth Story- From Cowpox to Vaccine Maitri) என்ற புத்தகத்தை இன்று வெளியிட்டார். கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் இந்தியாவின் அற்புதமான சாதனைகளை புத்தகம் விவரிக்கிறது. "இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை - கோவ் பாக்ஸ் முதல் வாக்சின் மைத்ரி வரை" என்ற இந்தப் புத்தகம் இந்தியா நடத்தும் உலகின் மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. தடுப்பூசி பற்றிய தயக்கம், ஆர்வம், கிடைக்கும் தன்மை, போக்குவரத்து வசதி போன்ற கடினமான பன்முகச் சவால்களை எதிர்கொண்டு தீர்வளிக்கிறது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்