இந்திய அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன் விரிவான புவியியல் தகவல் அமைப்பு எரிசக்தி வரைபடத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது. நாட்டின் அனைத்து எரிசக்தி வளங்களின் முழுமையான விவரங்களை இது வழங்குகிறது, மின் நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், நிலக்கரி வயல்கள் மற்றும் நிலக்கரி தொகுதிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்கள் மற்றும் உள்ளிட்ட 27 கருப்பொருள் அடுக்குகளை இது கொண்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராஜீவ் குமார் (துணைத் தலைவர், நிதி ஆயோக்), இந்தியாவின் எரிசக்தி துறையின் நிகழ்நேர மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். புவிசார் அடிப்படையிலான எரிசக்தி சொத்துக்களின் மேப்பிங் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் சாதகமானதும் மற்றும் கொள்கை உருவாக்கும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுவதுமாக இருக்கும். இது ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கருவியாக திகழும் என்று அவர் கூறினார். மேலும் விபரங்களுக்கு இந்தியாவின் எரிசக்தி வரைபடம் இணையத்தைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்