'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி! மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தினால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு, பிப்ரவரி 21 அன்று ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி நாளை தமிழ் வளர்ச்சித் துறை பெருமிதமாக உவகைப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு, உலகத் தாய்மொழி நாள் 21.02.2023 அன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரியில் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் [Central Institute of Classical Tamil (CICT)] நடத்தும் உலகத் தாய்மொழி நாள் விழா 2023, அந்நிறுவனத்தின் தொல்காப்பியர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. ஆதாரம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்