இந்தியர்களின் கூட்டு உணர்வான பெருமிதம் மற்றும் தேசப்பற்று மற்றும் கதர் துறையின் பாரம்பரிய கைவினைக்கலை ஆகியவை ஒருங்கிணைந்து, கதர் துணியால் ஆன உலகின் மிகப் பெரிய தேசிய கொடியை லே-யில் இன்று பறக்கவிட்டதன் மூலம் நாட்டை ஓரணியில் திரட்டியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கதர் துணியை உலகிற்கு அளித்த மகாத்மா காந்திக்கு அதிகபட்ச மரியாதை செலுத்தும் விதமாக, வரலாற்று சிறப்பு மிக்க இந்த கதர் தேசிய கொடியை கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் தயாரித்துள்ளது. இந்தக் கொடி 225 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 1400 கிலோ (உத்தேசமாக) எடை கொண்டதாகும். இந்த கொடியை 70 கதர் கைவினைஞர்கள் 49 நாட்களில் 3500 மனித வேலை மணி நேரம் உழைத்து தயாரித்துள்ளனர். மொத்தம் 33750 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த தேசியக் கொடியில் அசோக சக்கரம் 30 அடி சுற்றளவு கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கதர் கிராம தொழில் ஆணையம் இந்த கொடியை தயாரித்துள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்