ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவை (2023) இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் [Telecom Regulatory Authority of India (TRAI)] வெளியிட்டுள்ளது. அதோடு, தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் TRAI அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட குறைந்த அளவிலான இணைப்புக் கொண்ட இணையதள பயன்பாட்டு சேவை, தொலைபேசி சேவையின் தரம் குறித்த விதிமுறைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. இந்த ஒழுங்குமுறை விதிகள் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், விஎஸ்என்எல் (BSNL, MTNL and VSNL) போன்ற அடிப்படை சேவை செயல்பாட்டாளர்கள் மற்றும் இணையதள சேவை வழங்குபவருக்குப் பொருந்தும். www.trai.gov.in என்ற இணையதளத்தில் ஒழுங்குமுறை விதிகளை அறிந்துகொள்ளலாம். அதன் கருத்துக்களை ஏப்ரல் 17, 2023-க்குள் தெரிவிக்கலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்