காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு (Khadi Prakritik Paint), பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம் நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம், தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது. காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்றுத் தரும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்