தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட கிருத்துவர் / பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதற்கான நூல் வெளியிட தலா ரூ. 50000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதியுதவி அளிக்கப்படும். பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விவரங்களை தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிசுத் தொகை பெறத் தகுதியுடையோர் முறையான விண்ணப்பத்துடன் படைப்பினை எழுத்து வடிவில் 2 (இரண்டு) பிரதிகள், விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் குறிப்பிட்டு அரசுக்கு 30.06.2022க்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை சேப்பாக்கத்திலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர்ஆதிதிராவிடர் நல ஆணையரகம்சேப்பாக்கம், சென்னை 5 வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9