நகரங்களின் வாழ்க்கைத் தர பட்டியலில் சென்னை முதன்மை நிலையடைய வாழ்க்கைச் சூழல் மதிப்பாய்வில் பொதுமக்கள் பங்கேற்று சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், சென்னையின் வாழ்க்கைச் சூழல் மதிப்பாய்வில் (Ease of Living) பொதுமக்கள் பங்கேற்க அழைக்கின்றது. நாட்டின் பிற நகரங்களுடன் ஒப்பிட்டு சென்னைக்கு மதிப்பீடு வழங்கி இந்திய நகரங்களின் வாழ்க்கைத் தரப்பட்டியலில் சென்னையை முதன்மை நிலையடைய அழைப்பு விடுக்கிறது. பொதுமக்கள் மதிப்பாய்வு (Citizen Perception Survey) என்பது எளிதான வாழ்க்கைச் சூழல் கணக்கீட்டின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் நகரத்தின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிய பொதுமக்களின் கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். இந்த ஆய்வு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும், நகரில் சேவை வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த மதிப்பாய்வில் பங்கு கொள்ள https:eol2022.org%CitizenFeedback இணைப்பைப் பயன்படுத்தவும். வாழ்க்கைத் தரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியில் பல்வேறு முன்முயற்சிகளின் தாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதே எளிதான வாழ்க்கைச் சூழல் மதிப்பாய்வின் (Ease of Living) நோக்கமாகும். வாழ்க்கைத் தரம், பொருளாதார வாய்ப்புகள், நிலைத்தன்மை மற்றும் எதில் எதில் பின்னடைவு ஆகியவற்றை மாநகராட்சி அறிந்து கொள்ள உதவும். இந்த கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தற்போதைய திட்ட இடைவெளிகளைப் புரிந்து கொள்ளவும், சென்னையில் சேவை வழங்குதல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும். பொதுமக்கள் இந்த மதிப்பாய்வில் பங்கேற்பது எளிதான வாழ்க்கைச் சூழல் கணக்கீட்டில் (Ease of Living) 30% மதிப்பீட்டை பெற்றுத் தர உதவும். 2022 தேசிய தரவரிசைகளில் சென்னையை கணக்கிடுவதில் இது முக்கியமான பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 23.12.2022க்குள் இந்த மதிப்பாய்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்தி வெளியீடு: துணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்பெருநகர சென்னை மாநகராட்சி