தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் 15.12.2022 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22.12.2022 அன்று மாநிலங்களவையில் ஒருமனதாக இந்த அரசியல் சாசன திருத்த சட்டம் நிறைவேறியது. இதனையடுத்து பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போல கர்நாடக மாநிலத்தில் பெட்டா – குருபா, உத்தரப்பிரதேசத்தின் துரியா, நாயக், ஓஜா, பத்தாரி, ராஜ்கோண்ட் ஆகிய சாதியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான 2 மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்