மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023 வெளியிடப்பட்டது. தேசியக் கல்விக்கொள்கை 2020 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விதிகளை மறுஆய்வு செய்யவும், திருத்தம் செய்யவும், பல்கலைக்கழக மானியக்குழு நிபுணர் குழுவை அமைத்தது. இறுதி வரைவு விதிகளை மத்திய உயர்கல்வித்துறைக்கு அனுப்புவதற்குமுன் நிபுணர் குழுவினரின் வழிக்காட்டுதல், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆணையத்தின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டன. முக்கிய அம்சங்கள் பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023 தேசியக் கல்விக் கொள்கை 2020வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு என்ஏஏசி “ஏ” தரத்துடன் (NAAC ‘A’ Grade) 3.01 சிஜிபிஏ (3.01 CGPA) பெற்றிருக்கவேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப் (NIRF) சிறப்புப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப் (NIRF) ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு இணைய வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரர்களின் உரிய ஆவணங்களையும், வசதிகளையும் நிபுணர் குழு இணைய வழியில் ஆய்வு செய்யும். இந்த புதிய விதிகள், தரத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. என்ஏஏசி “ஏ” தரத்தைவிட (NAAC less than an ‘A’ grade) குறைந்த மதிப்பை பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது என்ஐஆர்ஃஎப் தரவரிசையில் (NIRF Ranking) 100 இடங்களுக்கு மேல் இடம் பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி நிபுணர் குழுவால் (UGC Expert Committee) தொடர்ந்து கண்காணிக்கப்படும். குறைகளை நிவர்த்தி செய்யாதபட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்ப பெற யுஜிசி (UGC) பரிந்துரைக்கும். கட்டணம், அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உரிய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1929377 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்