தேசிய சுகாதார ஆணையம் [National Health Authority (NHA)], சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு (Ministry of Health and Family Welfare and Department of Social Justice and Empowerment) இடையேயான புதிய ஒப்பந்தத்தின் மூலம் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தத்தில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர். எஸ். ஷர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு. ஆர். சுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து சுகாதார பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்தும் உத்தேசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்