ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த சிறார்களுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இவிருதினை வழங்குகிறது. கலை மற்றும் கலாச்சாரம் (7), வீரம் (1), புதுமை (1), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய ஆறு துறைகளில் தனித்துவமான சாதனைகளுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்களுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது வழங்கப்படும். குழந்தைகளின் தனித்துவமான சாதனைக்காக பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்ளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிராந்திய செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து முக்கிய தேசிய செய்தித்தாள்களிலும் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் நியமனங்களை அதிகரிக்க சிறப்பு முயற்சிகளை மேற்கொள்கிறது. தேசிய விருது இணையதளம், 1.4.2025 முதல் 31.07.2025 வரை பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அமைச்சகங்கள், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் / நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்கள் முதலானோர் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன் மூலம் விருது விளம்பரப்படுத்தப்பட்டு, கிராம பஞ்சாயத்துகள் / நகராட்சிகள் உட்பட அனைத்து மட்டங்களிலிருந்தும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட ஏதுவாகும். பரிந்துரைகளின் உண்மைத்தன்மை மாவட்ட நீதிபதிகள் மற்றும் கள வல்லுநர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, சமூக சேவை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளின் நிபுணர்கள் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்படும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்