'மல்லாகம்ப்’ மற்றும் ‘செபாக் தக்ராவ்’ உள்ளிட்ட 21 புதிய பிரிவுகளை மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் அரசு சேர்த்துள்ளது. இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள் இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ‘சி’ பிரிவு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். புதிதாக இணைக்கப்பட்டுள்ள விளையாட்டுகளின் விவரம் வருமாறு: பேஸ்பால், சைக்கிள் போலோ, ஃபென்சிங், மல்லாகம்ப், நெட் பால், பென்காக் சிலாட், ரோல் பால், செபாக் தக்ராவ், டென்பின் பௌலிங், டக் ஆஃப் வார், டென்னிஸ் பந்து கிரிக்கெட், பாடி பில்டிங், டெஃப் ஸ்போர்ட்ஸ், குடோ, மோட்டார் ஸ்போர்ட்ஸ், பாரா ஸ்போர்ட்ஸ், ஷூட்டிங் பால், ரக்பி, சாஃப்ட் டென்னிஸ், டிரையத்தலான் மற்றும் வுஷு ஆகும்.