13 ஆம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதமான ராமப்பா கோயிலை உருவாக்கியவர் ராமப்பா. மிகச் சிறந்த காகத்தியா வம்சத்தின் சிறப்பான கைவினைத்திறனைக் காட்டும் நினைவு சின்னம் ராமப்பா கோயில். இந்தியாவின் பரிந்துரையால், 2019 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடம் பட்டியலில், தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும் ருத்ரேஷ்வரா கோயில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முடிவு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவின் 44வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்