ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை வழங்கி வருகிறது. பள்ளிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 27,87,355 ஆதிதிராவிட மாணாக்கர் கல்வி பயின்று வருகின்றனர். (ஆதாரம்- ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை). இம்மக்களை கல்வியில் நிலையான முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு, ஆதி திராவிட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், 138 பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் விபரம் அறிய, இங்கு கிளிக் செய்யவும் மாணாக்கா்களுக்கான சலுகைகள் பள்ளிகளில் பயிலும் மாணாக்கா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சலுகைகள் பாடப்புத்தகங்கள் இரண்டு செட் குறிப்பேடுகள் நான்கு செட் சீருடைகள் மிதிவண்டிகள் -அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 11 ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள் சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி - ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியா்கள் மேலும் தகவல் அறிய : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினார் நலத்துறை