உயர்கல்வித் துறை அரசாணை எண்.163, உயர்கல்வித் (பி2) துறை 19.07.2018-ன்படி அறிவியல் நகரம் 2018-19 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுனை வழங்கி வருகிறது. இவ்விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ. 100000 காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் விண்ணப்பங்களை அறிவியல் நகர இணையதளத்திலிருந்து. (www.sciencecitychennai.in) பதிவிறக்கம் செய்து, அவற்றினை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் முன்மொழியப்பட்டு அறிவியல் நகரத்திற்கு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட வேண்டும். இதர தகவல்களுக்கு, இங்கே க்ளிக் செய்யவும் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9