விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு நபருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது வழங்கப்படுகிறது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. விருது ரூ.5.00 இலட்சத்துக்கான காசோலையும், தங்கத்தினாலான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை இந்த விருதில் அடங்கும். விண்ணப்பம் இவ்விருதுக்கான விண்ணப்பம், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் 15.07.2026 அன்று அல்லது அதற்கு முன்பாக https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையவழி வாயிலாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். விருது பெற தகுதி உள்ளவர் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார். வெளியீடு: தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009