தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. விருதுகளின் பட்டியல் வ.எண் விருதுகள் விளக்கம் 1 திருவள்ளுவர் விருது திருவள்ளுவர் விருது (1986 முதல்) திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 2 வீரமாமுனிவர் விருது . வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கி, தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கி, தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த அகராதியியல் அறிஞர்கள், வெளிநாடு வாழ் அகராதியியல் அறிஞர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அகராதியியல் அறிஞர்கள், தமிழ்நாட்டில் உள்ள அகராதியியல் அறிஞர்களுள் ஒருவருக்கு ஆண்டுதோறும் வீரமாமுனிவர் விருது விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது 3 மொழியியல் விருது மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வழங்குதல். விருதுத்தொகை ரூ.1 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை 4 முத்தமிழறிஞர் கலைஞர் விருது தமிழினத் தலைவர் என்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின்மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றிதமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும். விருதுத்தொகையாக ரூ. 10 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். 5 முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சிறந்த தமிழ் மென்பொருளுக்கு வழங்கப்படும் விருது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. 6 மறைமலையடிகளார் விருது மறைமலையடிகளார் விருது (2019 முதல்) தனித் தமிழில் படைப்புகள் அருகிவரும் நிலையில் தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் மறைமலையடிகளார் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 7 மகாகவி பாரதியார் விருது மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 8 பேரறிஞர் அண்ணா விருது பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்) தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு அண்ணா விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 9 பெருந்தலைவர் காமராஜர் விருது பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்) தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும்கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 10 பாவேந்தர் பாரதிதாசன் விருது பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 11 நற்றமிழ்ப் பாவலர் விருது தங்களின் கவிதைப் படைப்புகளில் (மரபுக்கவிதை, புதுக்கவிதை) பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச் சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி மொழிக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியையும் ஏற்படுத்தும் இரு பாவலர்களுக்கு ஆண்டுதோறும் நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுத்தொகை இருவருக்கு (மரபுக் கவிஞர், புதுக்கவிஞர்) ஒவ்வொருவருக்கும் ரூ. 50ஆயிரம், ரூ. 25 ஆயிரம் மதிப்பில் தங்கப்பதக்கம், தகுதியுரை 12 தேவநேயப் பாவாணர் விருது தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஆய்வும் தமிழ் ஈடுபாடும் கொண்டு பணியாற்றுகிற, அகராதியியல் துறையில் சிறந்து விளங்குகிற தகுதிவாய்ந்த உள்நாட்டு அறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுத் தொகை ஒருவருக்கு ரூ. 2.00 இலட்சம் ஒரு சவரன் தங்கப் பதக்கம் , தகுதியுரை 13 தூயதமிழ்ப் பற்றாளர் விருது நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், எப்பொழுதும், எங்கும் எதிலும் தூயதமிழையே பயன்படுத்துவோரிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் மொத்தம் 38 பேருக்குத் தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுத்தொகை - ஒவ்வொருவருக்கும் ரூ.௨௦ஆயிரம், சான்றிதழ் 14 தூயதமிழ் ஊடக விருது பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழைப் பயன்படுத்தி ஊடகப் பணிகளை ஆற்றிவருகிற, அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் (தொலைக்காட்சி மற்றும் வலையொளி) என இரு ஊடகங்களுக்கு ஆண்டுதோறும் தூயதமிழ் ஊடக விருது வழங்கப்படும். இவ்விருது 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. விருதுத்தொகை 2 ஊடகங்களுக்கு (காட்சி ஊடகம், அச்சு ஊடகம்). ஒவ்வொரு ஊடகத்திற்கும் ரூ. 50ஆயிரம், ரூ. 25 ஆயிரம் மதிப்பில் தங்கப்பதக்கம், தகுதியுரை 15 தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 16 தமிழ்த்தாய் விருது தமிழ்த்தாய் விருது (2012 முதல்) தமிழ் அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருது தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு “தமிழ்த்தாய் விருது" வழங்குதல். விருதுத்தொகை ரூ.5.00 இலட்சம், தகுதியுரை 17 தமிழ்ச்செம்மல் விருது தமிழ்ச்செம்மல் விருது (2015 முதல்) தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் வழங்குதல். விருதுத் தொகை ரூ. 25,000/- மற்றும் தகுதியுரை வழங்கப்படும். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 பேருக்கு வழங்கப்படும். 18 தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது 3 (நாளிதழ், வார இதழ், திங்களிதழ்). தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு இதழைத் தெரிவு செய்து ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது’, ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வாரஇதழ் விருது’, ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது’ என்ற பெயரில் சிற்றிதழ் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு விருதுக்கும் ரூ.2.00 இலட்சமும் கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடையும் வழங்கப்படும் 19 சொல்லின் செல்வர் விருது சொல்லின் செல்வர் விருது (2013 முதல்) “சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரீகம் பண்பாட்டை மக்கள் மனதில் சொற்பொழிவு வழி விதைப்பவராகவும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்வோராகவும் உள்ளவருக்கு வழங்குதல். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 20 சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்) “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை, தங்கப்பதக்கம் இல்லை 21 சிங்காரவேலர் விருது சிங்காரவேலர் விருது (2018 முதல்) தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 22 கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 23 காரைக்கால் அம்மையார் விருது காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு ‘காரைக்கால் அம்மையார்’ விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 24 கம்பர் விருது கம்பர் விருது (2013 முதல்) தமிழ் இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கவிபாடும் ஆற்றல் கதை நிகழ்ச்சி பாத்திரப்படைப்பு மற்றும் அவரது புகழ் பரப்பும் வகையில் கவிதை நூல்களை படைப்போர் மற்றும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழறிஞருக்கு வழங்குதல். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 25 கபிலர் விருது கபிலர் விருது (2012 முதல்) பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை புனைந்து வழங்கும் தமிழறிஞருக்கு வழங்குதல். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை. 26 உ.வே.சா விருது உ.வே.சா விருது (2012 முதல்) கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அறிஞருக்கு வழங்குதல். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 27 உமறுப் புலவர் விருது உமறுப் புலவர் விருது (2014 முதல்) இஸ்லாமிய தமிழ் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழறிஞருக்கு வழங்குதல். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 28 இளங்கோவடிகள் விருது இளங்கோவடிகள் (2015 முதல்) இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ வழங்குதல். விருதுத்தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை,பொன்னாடை 29 இலக்கிய விருது இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வழங்குதல்.விருதுத்தொகை ரூ.1.00இலட்சம், தகுதியுரை, பொன்னாடை 30 இலக்கிய மாமணி விருது இலக்கிய மாமணி (2021 முதல்) தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளைப் படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கியமாமணி விருது வழங்கப்படும். விருதுத்தொகை ரூ.5.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 31 இலக்கண விருது இலக்கணத் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வழங்குதல்.விருதுத்தொகை ரூ.1.00இலட்சம், தகுதியுரை, பொன்னாடை 32 அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது சமரச நெறிகளால் ஆன்மீகத் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘அருட்பெருஞ்சோதி வள்ளலார்’ விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 33 அயோத்திதாசப்பண்டிதர் விருது அயோத்திதாசப் பண்டிதர் விருது (2019 முதல்) சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அயோத்திதாசப் பண்டிதர் விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 34 அம்மா இலக்கிய விருது அம்மா இலக்கிய விருது (2015 முதல்) மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது வழங்கப்படும். விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை 35 தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், எப்பொழுதும், எங்கும் எதிலும் தூயதமிழையே பயன்படுத்துவோரிலிருந்து மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மூன்றுபேருக்குத் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு வழங்கப்படும். இப்பரிசு 2019ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. மாநில அளவில் மூவருக்கு, ஒவ்வொருவருக்கும் ரூ. 5 ஆயிரம், சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுக்கு https://awards.tn.gov.in/ என்ற இணைய வழி வாயிலாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உரிய காலத்திற்குள் விண்ணப்பம் வாயிலாகவோ விண்ணப்பிக்காலம். இயக்குநர்தமிழ் வளர்ச்சி இயக்ககம்தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னைதொலைபேசி எண் 044-28190412, 044-28190413 முந்தைய விருதாளர்கள் விருது பெற்றவர்களை பார்வையிட, இங்கே கிளிக் செய்க ஆதாரம்: தமிழ்நாடு அரசு விருதுகள் இணைய முகப்பு