தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இவ்விருது 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படும், இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in/) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி தொடர்புக்கான தொலைபேசி எண்கள் / மின்னஞ்சல் முகவரி தமிழ் வளர்ச்சி இயக்குநர் தமிழ் வளர்ச்சி வளாகம் தமிழ்ச்சாலை, எழும்பூர் சென்னை - 600 008 044 - 28190412 / 044 - 28190413 tamilvalarchithurai@gmail.com விண்ணப்பப் படிவம் விருது பெற்றோர் பட்டியல் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9