நாடு முழுவதும் உள்ள 1275 ரயில் நிலையங்களின் முக்கிய மேம்படுத்தல்கள் ரயில்வே அமைச்சகத்தின் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தத் திட்டம் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்டது. திட்டத்தின் நோக்கங்கள் மேம்படுத்தப்பட்ட நிலையங்கள், மக்கள் ரயிலில் ஏறும் இடமாக மட்டுமல்லாமல், ஷாப்பிங், ஓய்வு, கூட்டங்கள், தங்குதல் போன்ற பல்வேறு வணிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடிய நகர மையமாகவும் செயல்படுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையங்களைச் சுற்றியுள்ள தடையற்ற பன்முக இணைப்பு மற்றும் அணுகல் சாலைகளை வலுப்படுத்துதல் ஆகியவை நிலையங்கள் நகர மையமாக செயல்படவும், உள்ளூர் பொருளாதாரத்தின் இயக்கியாகவும், போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டை நோக்கிச் செல்லவும் உதவும். திட்டத்தை செயல்படுத்துதல் பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தை எளிதாக அணுகுதல், தங்குமிட வசதிகள், கழிவறைகள், மின்தூக்கி வசதிகள், சுகாதாரம், இலவச வைஃபை ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருட்கள் விற்பனை நிலையம், பயணிகள் தகவல் மையம், வணிகம் சார்ந்த கூட்ட அரங்குகள் ஆகிய வசதிகளை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்கள் பெறும். மேலும், கட்டடங்களை மறுசீரமைத்தல், ரயில் நிலையத்தில் இரு புறங்களிலும் அணுகும் வசதி, பல்முனைய ஒருங்கிணைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகள் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம், நீண்ட கால அணுகுமுறையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உள்ளடக்கப்பட வேண்டிய ரயில் நிலையங்களின் பட்டியல்.