தொழில்நுட்பம் சார்ந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையை ஒரு மாநிலம் /யூனியன் பிரதேசத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பயனாளிகள் தங்கள் உணவு தானியங்களை எந்த மின்னணு விற்பனை நிலையத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளும் விருப்பத் தேர்வு இதில் உள்ளது. ஆகஸ்ட் 2019-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறையின் செயல்பாடுகள் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய புகழ் பெற்ற நிறுவனங்களின் மூலம் மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படுவதை இத்திட்டம் மதிப்பாய்வு செய்தது. 2020-ம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் அலுவலகம்