2022 ஆண்டு முதல், தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு விளிம்புநிலை மக்கள் சட்ட உதவி பெற முடியும். எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக, தொலை சட்ட செயலி 2021 இல் தொடங்கப்பட்டது. இது தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் புரட்சியின் பயனாக, தொலை சட்ட சேவைகள் வெறும் ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பயனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நீதித்துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து சட்ட சேவைகளை வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிண்றன. அனைவருக்கும் நீதிக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், குடிமக்களை ஒருங்கிணைக்கும் மிகப் பெரிய காரணியாக சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதற்கும் திட்டத்தை செயல்படுத்துகிண்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 வழக்கறிஞர்களின் சேவைகளை இத்திட்டத்தின் கீழ் பிரத்தியேகமாக ஆணையம் வழங்கும். இந்த வழக்கறிஞர்கள் இப்போது பரிந்துரை வழக்கறிஞர்களாகவும் செயல்படுவார்கள், மேலும் வழக்குக்கு முந்தைய கட்டத்தில் தகராறு தவிர்ப்பு மற்றும் தகராறு தீர்வுக்கான பொறிமுறையை வலுப்படுத்தவும் உதவுவார்கள். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்