தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித் தொகை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு): பொறியியல்பட்ட மேற்படிப்பு, மருத்துவபட்ட மேற்படிப்பு, சட்டபட்ட மேற்படிப்பு, விவசாயபட்ட மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு, உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு Rs.12,000 பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு, விவசாய படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்டப்படிப்பு, உடற்பயிற்சிகல்வி பட்டப்படிப்பு Rs.8,000 பொறியியல்பட்டயப்படிப்பு, மருத்துவப் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்டயப்படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்டயப்படிப்பு Rs.5,000 மேல்நிலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி Rs.4,000 உதவி பெறுவதற்கு தகுதிகள் தொழிலாளர் நலநிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும். தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும். தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும். மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்). தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல். ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்). வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2. குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31. கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம் கல்வி ஊக்கத்தொகை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் பத்து மதிப்பெண்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்பிற்கு ரூ.2000/-ம் 12-ம் வகுப்பிற்கு ரூ.3000/-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மாணவர் பாடநூல் உதவித்தொகை தொழிலாளியின் பிள்ளைகள் படிப்பிற்குப் பாடப்புத்தகம் வாங்குவதற்காக மேல்நிலைவகுப்பு முதல் முதுகலைப் பட்டயப்படிப்பு வரை உதவித் தொகையாக கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது. மேல்நிலைக் கல்வி ரூ.1000/- பட்டயப் படிப்பு ரூ.1500/- பட்டயப் படிப்பு ரூ.2000/- முதுகலைப் பட்டயப் படிப்பு ரூ.3000/- கணினி அடிப்படை பாயியிற்சிக்கான உதவித்தொகை தொழிலாளர்களும் அவர்கள் பிள்ளைகளும் அடிப்படை கணினிப் பயிற்சிபெற வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் தலா ரூ.1000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு https://www.lwb.tn.gov.in/ta_/index.php வலைத்தளத்தை பார்க்கவும்