உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக, அரசுப் பள்ளிகளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இளங்கலை பட்டப்படிப்பு / டிப்ளமோ / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் படிப்பு முடியும் வரை மாணவியருக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தகுதி 6-12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள் ஆதார் கார்டு வங்கிக் கணக்கு 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி மாற்று சான்றிதழ்கள் விண்ணப்பிக்கும் முறை தகுதியுள்ள மாணவிகள் www.penkalvi.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி உயர்கல்விக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு ஜூன் 30 வரை சிறப்பு முகாம்கள் மூலம் தகுதியுள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையைப் (https://www.dipr.tn.gov.in/dashboard/upload/tapdf/1656323787.pdf) பார்க்கவும். ஆதாரம்: www.penkalvi.tn.gov.in