நடப்பு ஆண்டில் வெப்பமான பருவத்திற்கான வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) வெளியிட்டுள்ள பருவகாலக் கண்ணோட்டம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான அதிகபட்ச வெப்பநிலையைக் குறிக்கிறது. எனவே, பல துறைகள் மற்றும் பல பரிமாண நிர்வாக அணுகுமுறை மூலம் கடுமையான வெப்பமான காலநிலையின் பாதகமான விளைவுகளை நிர்வகிப்பதற்கும் குறைப்பதற்கும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கடுமையான வெப்ப அலைகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் உரிமையாளர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கான வேலை நேரங்களை வெப்ப நிலை பொறுத்து மறு திட்டமிடல். தொழிலாளி வெப்ப அழுத்தத்தை உணர்ந்தால், வேலையின் வேகத்தைக் குறைத்தல் / மறு திட்டமிடல் கோடைகாலத்தில் உடல் உழைப்பை மேற்கொள்வதற்கான தேவை / அவசரம் மற்றும் துண்டு வீதத்தை ஒழுங்குபடுத்த தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்தல். பணியிடங்களில் போதுமான குடிநீர் வசதிகள் மற்றும் எலக்ட்ரோலைட் சப்ளிமெண்ட்களை உறுதி செய்தல். மிகவும் வெப்பமான சூழ்நிலையில், தொழிலாளர்கள் ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும், குறைந்தது ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஓய்வு பகுதிகள் பணியிடத்திற்கு முடிந்தவரை அருகில் அமைந்திருக்க வேண்டும். வேலைப் பகுதிகளில் காற்றோட்டம் மற்றும் குளிரூட்டலை உறுதி செய்தல். கட்டுமான/வெளிப்புற தொழிலாளர்களுக்கு அவசரகால ஐஸ் கட்டிகள் மற்றும் வெப்ப அழுத்த தடுப்புப் பொருட்களை வழங்குதல். தொழிலாளர்களின் உடல்நலத்தை உறுதி செய்வதற்காக, உடல் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைத்தல். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். தொழிலாளர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தாகம் இல்லாவிட்டாலும், போதுமான அளவு அடிக்கடி தண்ணீர் குடிக்கவும் லேசான, வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்துளைகள் கொண்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெயிலில் வெளியே செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை/தொப்பி, காலணிகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் வெளியே வேலை செய்தால், ஒரு தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்துங்கள். மேலும் உங்கள் தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களில் ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள். உடலை நீர்ச்சத்து இழக்கச் செய்யும் மது, தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்கவும். அதிக புரதச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும், பழைய உணவுகளை உண்ண வேண்டாம். நீங்கள் மயக்கம் அடைந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, உடனடியாக ஒரு மருத்துவரை பார்க்கவும். உடலில் மீண்டும் நீர்ச்சத்து ஏற்றம் பெற உதவும் ORS, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான லஸ்ஸி, நீராகாரம், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். வெயிலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கான உதவிக்குறிப்புகள். அந்த நபரை குளிர்ந்த இடத்தில், நிழலில் படுக்க வைக்கவும். உடல் வெப்பநிலையைக் குறைப்பதற்காக ஈரமான துணியால் துடைக்கவும். தலையில் சாதாரண வெப்பநிலை தண்ணீரை ஊற்றவும். அந்த நபருக்கு ORS குடிக்கக் கொடுங்கள். அல்லது எலுமிச்சை சர்பத்/நீராகாரம் அல்லது உடலை மீண்டும் நீர்ச்சத்து பெற உதவும் ஏதேனும் ஒன்றைக் கொடுங்கள். உடனடியாக அந்த நபரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வெப்பத் தாக்கம் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால், நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். மூலம் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்