அறிமுகம் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகவும் இருக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது கிராமம், நகரம் மற்றும் வார்டு மட்டத்தில் முதன்மை தரவுகளின் மிகப்பெரிய ஆதாரமாகும். துல்லியமான தரவு மத்திய அரசின் மிக முக்கியமான மற்றும் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கக் கூடிய "மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027"-க்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. நாட்டின் முறையான திட்டமிடல், சிறந்த கல்வி, சுகாதார மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக இந்த கணக்கெடுப்பு மிகவும் துல்லியமாக நடத்தப்படவுள்ளது. "பொதுமக்கள் பங்களிப்பு துல்லியமான தரவுக்கு முக்கியம்" என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பணி, இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள், 1990 ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகின்றன. நாட்டில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் முதல் கட்டம் - வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (எச். எல். ஓ) ஏப்ரல் 1,2026 முதல் செப்டம்பர் 30,2026 வரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நாட்களுக்கு நடத்தப்படும். மாநில/யூனியன் பிரதேச வாரியான தற்காலிக கால அட்டவணை மற்றும் கேள்விகள் பற்றிய விவரங்களுக்கு, இங்கே சொடுக்கவும். இரண்டாம் கட்டம் - மக்கள் தொகை கணக்கீடு (பிஇ), பிப்ரவரி 2027 இல் நடத்தப்படும். டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளுக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சேகரிப்பு மற்றும் பரப்புதலின் தரம், செயல்திறன் மற்றும் நேரத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தும். கணக்கீட்டாளர்கள் தரவுகளை சேகரிப்பதற்காக ஒரு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனை (எச். எல். ஓ. அப்ளிகேஷன்) பயன்படுத்துவது இதில் அடங்கும். மேலும் பொது மக்களுக்காக ஒரு பிரத்யேக இணையதளம் மூலம் சுய கணக்கீட்டிற்கான (எஸ். இ. SE) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எச். எல். ஓ. க்கான கணக்கீட்டாளரால் வீட்டுக்கு வீடு தரவு சேகரிப்புக்கு சற்று முன்பு 15 நாட்களுக்கு திறந்திருக்கும். பொதுமக்கள் சுய கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 33 வகையான கேள்விகள் கேட்கப்படும். 17.07.2026 முதல் 31.07.2026 வரை தமிழ்நாட்டில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து http://se.census.gov.in/ இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மூலம் சுய விவரங்களை பூர்த்தி செய்யலாம். இணையவழியில் பதிவு செய்யாமல் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக வந்து கணக்கெடுப்பு நடத்தும்போது 33 வகையான கேள்விகளை கேட்டுத் தகவல்களை பெறுவார்கள். அவ்வாறு கேட்கும்போது காலவிரயத்தை தவிர்கலாம். எனவே. இணையவழியில் மக்களே தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து வைத்திருந்தால், கணக்கெடுப்பிற்கு வருபவர்கள் அந்த விவரங்களை சரிபார்த்துவிட்டு செல்ல ஏதுவாக இருக்கும். இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் துல்லியமான தரவுகள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், அனைவருக்கும் சமமான வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை வருப்பதற்கும், முறைபடுத்தப்பட்ட திட்டமிடல், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கு அடித்தளமாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது. சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி சுய கணக்கெடுப்பிற்கு, https://se.census.gov.in இணைய தளத்தைப் பார்வையிடவும் பொது மக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் "சுய கணக்கெடுப்பு" 17.07.2026-ஆம் தேதி தொடங்கி 31.07.2026-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 வகையான கேள்விகளுக்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் பதில் அளிக்கவேண்டும். இந்த சுய கணக்கெடுப்பு பணியை இணையவழியில் நிறைவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் "Self Enumeration ID" சுயக்கணக்கெடுப்பு எண் அவரவர் செல்போனிற்கு வரும். அதனை மக்கள் இணையவழியில் பதிவு செய்திருப்பவர்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், "வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு" பணியில் ஈடுபடக்கூடிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்வார்கள். இந்த பணி 01.08.2026-ஆம் தேதி முதல் 30.08.2026-ஆம் தேதிவரை 1 மாத காலத்திற்கு தீவிரமாக நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில், அரசு நியமித்துள்ள கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக பொதுமக்களில் வீடுகளுக்கே வந்து விவரங்களை சேகரிக்க உள்ளனர். அப்போது ஏற்கனவே இணையவழியில் தங்களின் விவரங்களை பதிவு செய்தவர்கள், தங்களின் செல்போனுக்கு வந்துள்ள சுயக்கணக்கெடுப்பு எண். Self Enumeration ID-யை வீடுகளுக்கு வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அந்த விவரங்களை சரிபார்த்து கணக்கெடுப்பை நிறைவு செய்து செல்வார்கள். குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் சுயமாக பதிவு செய்து வீட்டு விவரங்களை வழங்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பொதுமக்கள் 1855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் . சுய கணக்கெடுப்புக்கான படிப்படியான செயல்முறை சுய கணக்கீட்டிற்கான பயனர் வழிகாட்டியை அணுக, இங்கே சொடுக்கவும். ஆதாரம்:பதிவாளர் பொது மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், இந்தியா