மனவளர்ச்சி குறைபாடு மனவளர்ச்சி குறைபாடு என்பது அறிவுசாற் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை பாதிக்கும் ஒரு வகை குறைபாடு. இந்த குறைபாடு குழந்தையின் அன்றாட தனிப்பட்ட மற்றும் சமூக செயல்பாடுகளை பாதிக்கக் கூடியது. மனவளர்ச்சி குறைபாட்டை பொதுவாக கற்றல் குறைபாடு எனவும் கூறுவர். இந்த குறைபாடு குழந்தை பிறந்து 18 வயதிற்குள்ளாகவே வெளிப்படும். மனவளர்ச்சி குறைபாட்டால் ஏற்படும் தாக்கம் பேசுவதில் பிரச்சனை நியாபகம் வைத்திருப்பதில் பிரச்சனை தங்களை சுற்றி என்ன நடக்கிறது என அறியாமல் இருத்தல் சமூக விதிகள் மற்றும் வரைமுறைகளை புரிந்து கொள்ள முடியாமல் இருத்தல் தங்களது பிரச்சனைகளை தாங்களே சமாளிக்க முடியாமல் இருத்தல் தங்களது தனிப்பட்ட பராமரிப்பு தேவைகளை செய்து கொள்வதில் சிரமம் தங்களது செயல்களின் விளைவுகள் குறித்து யோசிக்கும் திறன் போன்றவற்றில் சிரமம் ஏற்படுதல் மனவளர்ச்சி குறைபாட்டிற்கான சாத்தியமான காரணங்கள் கற்பகாலத்தில் ஏற்படும் காரணங்கள் கற்பகாலத்தில் ஏற்படும் காரணங்கள் என்பது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஏற்படும் விளைவுகள். மரபணு மற்றும் பரம்பரை நோய்கள் கற்பகாலத்தின் போது எடுத்துக் கொண்ட நச்சுகள் (மது, புகையிலை, ஈயம் போன்ற இரசாயனங்கள்) மூலம் குழந்தைக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம் கற்பகாலத்தின் போது (எச் ஐ வி / எய்ட்ஸ்) போன்ற நோய் ஏற்படுதல் நரம்பு குழாய் குறைபாடுகள் (அனன்செபலி, ஸ்பைனா பைபிடா) பிரசவத்தின் போது ஏற்படும் காரணங்கள் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், தொப்புள் கொடி விபத்துகள், மகப்பேறு அதிர்ச்சி, தடைபட்ட பிரசவம், தலை அதிர்வு. பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் காரணங்கள் சுற்றுப்புற சூழல் இந்த சூழ்நிலையின் முக்கியமான காரணமாக உள்ளது இதில் துஷ்பிரியோகமும் அலட்சியமும் அடங்கும் சுற்றுப்புற சூழல் நச்சுகள் (பெட்ரோல் மற்றும் வர்ணங்கள் போன்றவை மற்றும் பல) சுயபராமரிப்பு மற்றும் கவனிப்பு குறித்த முறைகள் பொதுவாக ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சுயபராமரிப்பு என்னவென்றால் தானே தன் “உடையைப் போடுதல் மற்றும் கழற்றுதல், தானே குளித்தல், தானே நீர் குடித்தல், தானே உணவு உண்ணுதல், தானே தனது இயற்கை உபாதைகளை கவனித்துக் கொள்ளுதல்” போன்றவை ஆகும். இந்த பயிற்சி முறையை படிப்படியாக கற்றுக் கொடுக்க வேண்டும். அவையாதென்றால்: வாய்மொழி மூலம் கற்பித்தல் நடித்துக் காட்டுதல் செயல்முறையாக கற்பித்தல் சொந்தமாக செய்தல் இலக்கு நிர்ணயம் பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக, முதன்மை பராமரிப்பாளர்கள் தங்கள் குழந்தைக்கு கற்பிக்கப் போகும் செயலை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிற்சி முறை குறித்து சரியாக திட்டமிட வேண்டும். என்ன செயலை குழந்தைக்கு கற்பிக்கப் போகிறீர்கள், எந்த முறையில் கற்பிக்கப் போகிறீர்கள், எத்தனை முறை கற்பிக்கிறீர்கள், குழந்தையின் பதில்/கருத்து என்ன, என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தீர்கள், அந்த பிரச்சனைகளை சரி செய்ய என்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள், ஒரு செயலை கற்றுக் கொள்ள உங்கள் குழந்தைக்கு எவ்வளவு காலம் எடுத்தது, இறுதியாக குழந்தை அந்த செயலை கற்றுக் கொண்டதா இல்லையா போன்றவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். வாய்மொழி முலம் கற்பித்தல் வாய்மொழி மூலம் கற்பித்தல் என்பது முதற்கட்ட பயிற்சி முறை ஆகும். இந்த முறையில் முதன்மை பராமரிப்பாளர் குழந்தைக்கு ஒரு செயலை செய்வதைக் குறித்த வழிமுறைகளை சீராக மற்றும் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு: குழந்தைக்கு குவளையில் எவ்வாறு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை கற்பிக்க, வாய்மொழி வழிமுறைகள் கீழ் கண்டவாறு இருக்க வேண்டும். மேஜையின் அருகில் செல் குவளையை எடுக்க முயற்சி செய் குவளையை எடு குவளையை கைகளால் கெட்டியாகப் பிடி குவளையை மெதுவாக உன் வாயின் அருகே கொண்டு செல் மெதுவாக தண்ணீரை குவளையிலிருந்து குடி மெதுவாக குவளையை வாயிலிருந்து எடு மெதுவாக குவளையை மேஜை மீது வை ஒரு செயலை அதிகபட்சமாக 8-10 பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். நடித்துக்காட்டுதல் மூலம் கற்பித்தல் நடித்துக் காட்டும் முறையில் கீழ்கண்டவாறு நடித்துக் காட்ட வேண்டும். மேஜையின் அருகில் செல்ல வேண்டும் குவளையை எடுக்க முயற்சித்துக் காட்ட வேண்டும் குவளையை எடுத்துக் காட்ட வேண்டும் குவளையை கைகளால் கெட்டியாக பிடித்துக் காட்ட வேண்டும் குவளையை மெதுவாக உன் வாயின் அருகே கொண்டு செல்ல வேண்டும் மெதுவாக தண்ணீரை குவளையிலிருந்து குடிக்க வேண்டும் மெதுவாக குவளையை வாயிலிருந்து எடுக்க வேண்டும் மெதுவாக குவளையை மேஜை மீது வைக்க வேண்டும் இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக நடித்துக் காட்ட வேண்டும். மேலும், குழந்தை ஒரு பகுதியை கற்ற பின்னரே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு சிறுசிறு பகுதிகளாக ஒரு முழுமையான செயலை குழந்தைக்கு கற்பிக்க வேண்டும். செயல்முறையாக கற்பித்தல் செயல்முறையாக கற்பித்தல் முறையில் கீழ் கண்டவாறு பராமரிப்பாளர் குழந்தையுடன் சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தையை மேஜையின் அருகில் அழைத்து செல்ல வேண்டும் குழந்தையின் கைகளை பிடித்து குவளையை எடுக்க முயற்சித்துக் காட்ட வேண்டும் குழந்தையுடன் சேர்ந்து குவளையை எடுத்துக் காட்ட வேண்டும் குவளையை கைகளால் குழந்தையை கெட்டியாக பிடிக்கச் செய்ய வேண்டும் குவளையை மெதுவாக குழந்தையின் வாயின் அருகே கொண்டு செல்ல வேண்டும் மெதுவாக தண்ணீரை குவளையிலிருந்து குடிக்க வேண்டும் மெதுவாக குவளையை வாயிலிருந்து குழந்தையின் கைகளை பிடித்தவாறு எடுக்க வேண்டும் மெதுவாக குவளையை குழந்தையின் கைகளை பிடித்தவாறு மேஜை மீது வைக்க வேண்டும் சொந்தமாக செய்தல் குழந்தை ஒவ்வொரு செயலை கற்கும் பொழுது போதுமான ஊக்குவிப்பு வழங்க வேண்டும் மேலும், குழந்தை தன் செயலை குழந்தையாகவே செய்து கொள்ள விட்டுவிட வேண்டும் மன அழுத்தத்தை சமாளிக்கும் முறைகள் உங்களது மனதிற்கு அமைதி தரக் கூடிய செயல்களில் கவனத்தை செலுத்த வேண்டும். ஆதாரம்: மனவளர்ச்சி குறைபாடு