காதொலி கருவி வழங்குதல் திட்டத்தின் பெயர் காதொலி கருவி வழங்குதல் பயனாளி 3 முதல் 70 வயது வரை வருட வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும் திட்டத்தைப் பற்றி இந்த உதவி ஒலியின் அளவைக் கூட்டி காது கேளாதோருக்கு காது கேட்க உதவுகிறது. உதவி விவரம் காதொலி கருவி் ஏன்? இந்த உதவி ஒலியின் அளவைக் கூட்டி காது கேளாதோருக்கு காது கேட்க உதவுகிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1981 தகுதி 3 முதல் 70 வயது வரை வருட வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும் உதவி - நிதி மற்றும் பொது காதொலி கருவி் அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக் குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? காதொலி கருவி துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் 3 முதல் 70 வயது வரை வருட வருமானம் ரூ. 30000க்குள் விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக் குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு காதொலி கருவி கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம். மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடுபோன் - 0452-4231192 மொபைல் - 9344125161 “பேசும் திறன் அற்ற காது கேளாதவரை” திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை திட்டத்தின் பெயர் “பேசும் திறன் அற்ற காது கேளாதவரை” திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை பயனாளி இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி பேச்சு மற்றும் காதொலி இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது. உதவி விவரம் ரூ. 10000 ரொக்கமாகவும் ரூ. 10000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் பார்வையற்றோர் திருமண உதவித்தொகை ஏன்? இந்த உதவி பேச்சு மற்றும் காதொலி இழந்த ஒரு ஆணோ, பெண்ணோ தடையற்ற, கௌரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். உதவி - நிதி மற்றும் பொது ரூ. 10000 ரொக்கமாவும் ரூ. 10000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் (பார்வையற்றோர் திருமண உதவித்தொகை) அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? "பேசும் திறன் அற்ற காது கேளாதவரை” திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு ரூ. 20000 திருமண உதவித்தொகை துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்; ஆண்டு வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அன்புள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம், பேசும் திறன் அற்ற காது கேளாதவரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமில்லாத நபருக்கு கொடுக்கப்படும் திருமண உதவித்தொகை வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். அதற்குத் தேவையான ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம் மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர் நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடு போன் 0452-4231192 மொபைல் 9344125161