ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ள முன்னுரிமை நடவடிக்கைகள் 2026-27-ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.2.93 லட்சம் கோடியில் 2026 ஜூலை வரை ரூ.1.14 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை (சுமார் 39%) இந்திய ரயில்வே பயன்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே பாதுகாப்பிற்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. அதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக 2026-27-ம் நிதியாண்டில் ரூ.1,20,389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளை தடுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கவச் தானியங்கி ரயில் பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. இது அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாகும். ரயில் ஓட்டுநர் குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் ரயிலை இயக்கத் தவறினால் பிரேக்குகள் தாமாகவே இயங்கி செயல்படுத்துவதற்கு கவாச் அமைப்பு உதவுகிறது. அத்துடன், மோசமான வானிலை சூழலில் ரயில்கள் பாதுகாப்பாக இயங்க உதவுகிறது. தில்லி-மும்பை வழித்தடத்தில் 1,423 வழித்தட கிலோமீட்டர் மற்றும் தில்லி-ஹவுரா வழித்தடத்தில் 1,210 வழித்தட கிலோமீட்டர் என்று 2,633 வழித்தட கிலோமீட்டர் கவாச் 4.0 முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கவாச் பணிகளுக்காக 2026 ஜூன் மாதம் வரை ரூ.3,875 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294805®=48&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்