ஆயுஷ்-64 பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 (AYUSH-64) ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ஆயுஷ்-64 என்ற மருந்து, அறிகுறிகள் அல்லாத லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக நாட்டின் பிரபல ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம் - அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்) ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கொவிட்-19 மேலாண்மைக்கான தேசிய பணிக் குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்