வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் பதிவு தொடர்பான சரியான தகவல்களைப் பெற இந்திய தேர்தல் ஆணையம் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணை வழங்கியுள்ளது. இலவச வாக்காளர் உதவி எண் 1950 வாக்காளர்கள் தங்கள் எஸ்.டி.டி குறியீட்டுடன் (STD Code) 1950 என்ற எண்ணில் அழைத்து வாக்காளர் பதிவு நடைமுறை குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். வாக்காளர் உதவி எண்ணை கீழ்காணும் விவரங்களைப் பெறவும் தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று சரி பார்க்க உங்கள் நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி மையம் பற்றிய விவரங்கள் உங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் குறித்த விவரம் தேர்தல் அறிவிக்கப்படும்போது தேதிகள் குறித்து அறிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் VVPAT (Voter Verifiable Paper Audit Trail) குறித்த விவரங்கள் உங்கள் குறைகளைப் பதிவு செய்ய ஆதாரம்: தலைமை தேர்தல் அதிகாரி வலைதளம்