மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புலனம் மூலமாக புகார்களை அளிக்கலாம் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பொதுமக்கள் புகார்களை நேரடியாகவும், கடிதம் அல்லது தொலைபேசி வாயிலாகவும் அளித்து வருகின்றனர். இனி புகார்களை புலனம் (WhatsApp) செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 9445865400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் புலனம் (WhatsApp) செயலி மூலமாக அளிக்கலாம். புகார்களைப் பற்றிய விவரங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9