முன்னுரை சந்தையில் பல்வேறு வண்ணங்களிலும், டிசைன்களிலும் துணிகள் நிறைந்துள்ளன. சரியான துணிகளை தேர்ந்தெடுப்பது நல்ல ஆடைகளை வடிவமைக்கவும், அதனை அணிபவருக்கு செளகர்யத்தை அளித்து, ஆளுமையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமையும். ஆகையால் ஆடை வடிவமைப்பாளருக்கு துணிகளின் வகை, தன்மை, பண்புகள் மற்றும் அணிபவரின் வயது மற்றும் செயல்பாடுகள் ஆகியவை குறித்த அறிவு மிகவும் அவசியமாகும். துணிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் பல கருத்துக்களை கொள்ள வேண்டும். அவை வயது, பாலினம், நாடு, தட்பவெப்பநிலை, ஆடையின் தேவை, அணிபவரின் செயல்பாடுகள் துணிகள் சந்தையில் கிடைக்கும் தன்மை, துணிகளின் டிசைன் மற்றும் நாகரீக பாங்கு. இளங்குழந்தைக்கு ஏற்ற துணி வகைகள் 0-11 மாத வயதுள்ள பிறந்த குழந்தைகளை இளம்குழந்தை என அழைக்கிறோம். அவர்களுடைய தோல் மென்மையானது மற்றும் மிருதுவானது. எனவே, காற்றோட்டமுள்ள, ஈரத்தை உறிஞ்சக்கூடிய மென்மையான ஆடைகளே, இவர்களுக்கு ஏற்றதாகும். வ.எண் பெயர் ஏற்ற துணி வகை ஏற்ற டிசைன் ஏற்ற நிறம் 1 ஜிப்லா பருத்தி சிறிய டிசைன்கள் உடைய அச்சடிக்கப்பட்ட மோடிப் வடிவங்கள் வெளிர் நிறங்கள் (இளஞ் சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, ஊதா, ஆரஞ்சு) 2 பிப் பருத்தி சிறிய அச்சடிக்கப்பட்ட மோடிப்கள் வெளிர் நிறங்கள் 3 போனெட் பருத்தி, கம்பளி அச்சிட்ட டிசைன்கள் பின்னலாடை டிசைன்கள் விருப்பப்பட்ட நிறங்கள் 4 நிக்கர் பருத்தி அச்சுகள் அற்ற அல்லது அச்சிட்ட டிசைன்கள் வெளிர் நிறங்கள் 5 பேன்டி பருத்தி அச்சுகள் அற்ற அல்லது சிறிய அச்சுக்களுடையது வெளிர் நிறங்கள் சிறார்களுக்கு ஏற்ற துணிவகைகள் சிறார்கள் சுறுசுறுப்பானவர்கள் மற்றும் வேகமாக வளரக்கூடியவர்கள். 1-11 வயதுள்ள சிறார்கள், முன்பள்ளி பருவத்தினர், பள்ளி பருவத்தினர், நடுநிலை பள்ளி பருவத்தினர் என வகைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் பிரகாசமான நிறமுள்ள ஆடைகளை விரும்புவர். இவர்களுடைய வேகமான வளர்ச்சி கருத்தில் கொண்டு ஆழ்ந்த ஹெம்கள் மற்றும் அகலமான ஓரங்களையுடைய உடைகள் ஏற்றதாக கருதப்படுகிறது. வ.எண் பெயர் ஏற்ற துணி வகை ஏற்ற பொருத்தமான டிசைன்கள் பொருத்தமான வண்ணம் 1 சன் சூட்டர் ரோம்பர் பருத்தி - நெய்தது, பின்னலாடை டெனிம் கோடுகள், கட்டங்கள், சிறிய பூ மற்றும் கார்டூன்,டிசைன் / ஜியோமெதி டிசைன் வெளிறிய, நிறங்கள் கிரே காபி கலர், பச்சை, நீலம் 2 பேபிஃபிராக் A லைன் பிராக், அம்பெர்லா ஃபிராக், சம்மர் ஃபிராக், ஃபிளேர்டு ஃபிராக் பருத்தி, சேடின், வலை துணிபட்டு, செயற்கை துணிகள், டெனிம் பிரிண்ட் செய்த நெய்த டிசைன், கோடுகள், கட்டங்கள், பூ வேலைப்பாடு செய்த டிசைன் எந்த நிறம் வேண்டுமானாலும் 3 பேண்ட் சார்ட்ஸ் டெனிம், பருத்தி ஃபிலெண்டட் துணி வகைகள் கட்டங்கள், பெரிய கோடுகள் நெய்த டிசைன்கள் எந்த நிறம் வேண்டுமானாலும் 4 சட்டை டெனிம், பருத்தி, ஃபிலெண்டட் துணி வகைகள் கட்டங்கள், பெரிய கோடுகள், நெய்த டிசைன்கள், பூ டிசைன், ஜயோமெதி எந்த நிறம் வேண்டுமானாலும் 5 T சர்ட் பருத்தி, பின்னல் ஆடை பிரிண்டட் எந்த நிறம் வேண்டுமானாலும் வளர் இளம் பெண்களுக்கேற்ற துணி வகைகள் வளர் இளம் பருவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சிறுவர் பருவத்திலிருந்து இளம் வயதினராக மாறும் பருவமாகும். ஹார்மோன்களின் மாற்றத்தால் உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும். இப்பருவத்தில் ஆடையின் மேல் அவர்களின் விருப்பம் மாறுபடும். சக வயதினர் உடுத்தும்படி அவர்களும் மாறுவர். தன்னுடைய வயதையொத்த நண்பர்கள் மற்றும் விருப்பமானவர்களின் உடையை போல் அணிய விரும்புவார்கள்., வ.எண் பெயர் ஏற்ற துணி வகை ஏற்ற/ பொருத்தமான டிசைன்கள் பொருத்தமான வண்ணம் 1 சல்வார், கமீஸ் பருத்தி, பட்டு, சேட்டின் செயற்கை இழை, ப்லெண்டட் துணிகள் பிரிண்ட், நெய்த வேலைப்பாடு செய்த நிறம் ஏற்றப்பட்ட டிசைன்கள் எல்லா வகையான நிறங்கள் 2 ஸ்கர்ட், குர்தா பருத்தி, பட்டு, சேட்டின் செயற்கை , இழை ப்ளெண்ட்டு துணிகள், டெனிம் பிரிண்ட், நெய்த வேலைப்பாடு செய்த எல்லா வகையான நிறங்கள் நிறம் ஏற்றப்பட்ட டிசைன்கள் 3 மிடி,மிடி டாப் . பருத்தி, பட்டு, சேட்டின், செயற்கை இழை, ப்லெண்டட் துணிகள் டெனிம் ஜீன்ஸ், வெல்வெட் நாகரீக உடை வகைகள், பிரிண்ட் நெய்த வேலைப்பாடு செய்த நிறம் ஏற்றப்பட்ட டிசைன்கள் எல்லா வகையான நிறங்கள் 4 பேண்ட்டாப் டெனிம் , பருத்தி, பிலெண்டட் துணி பிரிண்ட் நெய்தல் டிசைன்கள் எல்லா வகையான நிறங்கள் இளம் ஆண்களுக்கேற்ற துணி வகை இளம் வயதில் ஆண்களின் வளர்ச்சி மிகவும் வேகமானதாக இருக்கும். தோள்பட்டை அகலமாகும் மற்றும் உயரமும் அதிகமாகும். அவர்களுடைய ஆடை அணியும் பண்பும் சக வயதினருடன் சேர்ந்து மாறுகிறது. அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் போல் மாறுகிறது. எனவே தற்கால ஆடை வடிவமைப்பில் இளம் வயதினருக்கு ஆடையைப் பற்றிய ஆர்வத்திற்கு அடித்தளமாக அமைகிறது. ஆண்களுக்கேற்ற துணி வகை மார்கெட்டில் உள்ள துணிவகைகளை பொருந்தும், அவர்களின் பணியை பொருத்தும் ஆண்களின் உடைகள் வேறுபடுகிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆண்கள் என அழைக்கிறோம். இளமை பருவம், நடுத்தர பருவம், முதுமை பருவம் என பிரிக்கிறோம். முதுமை பருவத்தில் பெரும்பாலும் மென்மையான துணியை விரும்புகிறார்கள் மற்றும் வெளிரிய நிறத்தையும் டிசைன் அல்லாத துணிகளையே விரும்புகின்றனர். வ.எண் பெயர் ஏற்ற துணி வகை ஏற்ற/ பொருத்தமான டிசைன்கள் பொருத்தமான வண்ணம் 1 சட்டை பருத்தி, டெனிம், ப்லெண்டன் துணிகள் கோடுகள், கட்டங்கள், அப்ஸ்ட்ரேக்ட் எல்லா நிறங்களும் 2 T-சர்ட் பருத்தி, பின்னலாடை, ப்லெண்டட் பின்னலாடை பின்னலாடை டிசைன், பிரிண்ட்ஸ் எல்லா நிறங்களும் 3 சார்ட்ஸ், பெர்முடாஸ் பருத்தி, பின்னலாடை, ப்லெண்டட் பின்னலாடை கட்டங்கள், கோடுகள் எந்த நிறமானாலும் 4 பேண்ட் டெனிம், பருத்தி ஆடை, பிலெண்டடு துணி வகை நெய்யப்பட்ட டிசைன்கள் எந்த நிறமானாலும் பெண்களுக்கேற்ற துணி வகைகள் பெண்களுக்கான ஆடைகள் நாகரீக வளர்ச்சியினாலும், பாரம்பரியத்தினாலும் முன்னேறி வருகிறது. மார்கெட்டில் பல்வேறு விதமான வண்ணங்களிலும் பலவகையான துணிகள் நிறைந்து உள்ளன நாகரீக வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், பெண்களின் உடலமைப்பை பொருத்தும், அவர்களின் பணியை பொருத்தும் வருமானத்தை மனதில் கொண்டும் அவர்களின் ஆடைகள் வடிவமைக்கப்படுகிறது. வ.எண். பெயர் ஏற்ற துணி வகை ஏற்ற/ பொருத்தமான டிசைன் பொருத்தமான வண்ணம் 1 புடவை , பாவாடை பருத்தி, சேட்டின் பிளைன் (தனிநிறம்) எந்த கலர் வேண்டுமானால் 2 மேக்ஸ், ஹவுஸ்கோட் பருத்தி, பிலெண்டட் துணிகள் பூ அப்ஸ்ட்ரேக்ட் ஜியோமெட்ரிக் எந்த கலர் வேண்டுமானால் 3 பிளவுஸ் பருத்தி, பட்டு பிலெண்டட் துணிகள் நெய்தவை, வேலைப்பாடு செய்தவை, பிரிண்ட்ஸ் சேலைக்கு ஏற்ற நிறம் 4 இரவு ஆடைகள் பருத்தி, பிலெண்டட் துணிகள் பின்னலாடை, சிறிய டிசைன்களுடன் எந்த கலர் வேண்டுமானாலும் குறிப்பிட்ட ஆடைகளுக்கு தேவையான துணி அளவு துணியை வாங்குவதற்கு கடைக்கு செல்வதற்கு முன்னால் ஆடைக்கு தேவையான துணியின் நீளம், அகலம், நிறைவு போன்றவற்றை அறிந்திருத்தல் அவசியமாகும். இதன் மூலம் ஆடைக்கு தேவையான துணியின் அளவை கணக்கிடுதல் எளிதாகிறது. கடைக்காரரின் ஆலோசனையின்படி துணியை அதிகமாகவோ குறைவாகவோ வாங்க வேண்டிய தர்மசங்கட நிலையை தவிர்க்கலாம். ஆடைக்கான மாதிரியை வரையும் பொழுதும், வெட்டும் பொழுதும் ஏற்படக்கூடிய மன உளைச்சலை குறைக்கும். கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் நாம் பொதுவாக பயன்படுத்தும் ஆடைகளுக்கு தேவையான துணியின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை 36” அகலமுள்ள துணிக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அகலம் 42” அல்லது 60” இருக்குமானால் தேவைப்படும் துணியின் அளவை 20-30 செ.மீ குறைத்துக் கொள்ளலாம். வ எண் ஆடையின் பெயர் சில சமயங்களில் தேவைப்படும் துணியின் அளவு ஒரு பக்க டிசைன் கோடுகள் பெரிய கோடுகள் 1 ஜப்லா 1/2 மீட்டர் 1/2 மீட்டர் 1/2 மீட்டர் +4" 2 பேண்டி (3வயது) பேண்டி நீளம் + 6" பேண்டி நீளம் + 6" பேண்டி நீளம் + 6" 3 நிக்கர் (டிராயர்) டிராயர் நீளம் +6" (0.4மீ) டிராயர் நீளம் +6" (0.4மீ) +2" டிராயர் நீளம் +6" (0.4மீ) +4" 4 ரோம்பர் 1 மீட்டர் 1 மீட்டர் 1 மீட்டர் + 0.25 மீ 5 ஃபிராக் a) பிளைன் ஃபிராக் (கை காலர் அற்றது ஃபிராக் நீளம் + 5" (அ) 1 மீட்டர் ஃபிராக் நீளம் + 5" (அ) 1 மீட்டர் ஃபிராக் நீளம் + 5" (அ) 1 மீட்டர் b) ஹலைன் ஃபிராக்(காலர் + கை) ஃபிராக் நீளம் + கை நீளம் +6"(அ) 1.25 மீட்டர் ஃபிராக் நீளம் + கை நீளம் + 6" (அ) 1.25 மீட்டர் + 0.25 மீ ஃபிராக் நீளம் + கை நீளம் + 6" (அ) 1.25 மீட்ட ர் + 0.50 மீ c) கேதர்டுஃபிராக் (காலர் +ஃபப் கை) ஃபிராக் நீளத்தின் இருமடங்கு+ கை நீளம் + 9"(அ) 2 மீ ஃபிராக் நீளத்தின் இருமடங்கு + கை நீளம் +9" (அ) 2 மீட்ட ர் + 0.25 மீ ஃபிராக் நீளத்தின் இருமடங்கு+ கை நீளம் + 9" (அ) 2 மீட்டர் + 0.50 மீ 6 ஸ்கர்ட்ஸ் (4-8 வயது) a) பிளைன் சார்ட் ஸ்கர்ட் ஸ்கர்ட் நீளம் இருமடங்கு + 6" ஸ்கர்ட் நீளம் இருமடங்கு + 6" ஸ்கர்ட் நீளம் இருமடங்கு + 6" b) கேதர்டு ஸ்கர்ட் ஸ்கர்ட் நீளம் . இருமடங்கு+6"+4" ஸ்கர்ட் நீளம் . இருமடங்கு + 6"+ 4" ஸ்கர்ட் நீளம் . இருமடங்கு +6"+ 4" c ப்ளீட்டு ஸ்கர்ட் ஸ்கர்ட் நீளம் +3 மடங்கு + 6" + 4" ஸ்கர்ட் நீளம் +3 மடங்கு + 6" + 4" ஸ்கர்ட் நீளம் +3 மடங்கு + 6" + 4" d) ஃபுல் ஸ்கர்ட் ஸ்கர்ட் நீளம் இருமடங்கு + 6" ஸ்கர்ட் நீளம் இருமடங்கு + 6" ஸ்கர்ட் நீளம் இருமடங்கு + 6" 7 பிளவுஸ் (34-36") பின் முதுகு நீளம் + கை நீளம் + 10" பின் முதுகு நீளம்+ கை நீளம்+10"+0.20 மீ பின் முதுகு நீளம் + கை நீளம் + 10" + 0.25) (30-32") பின் முதுகு நீளம் + கை நீளம் + 5" பின் முதுகு நீளம்+ சை நீளம்+5"+ 0.20 மீ பின் முதுகு நீளம்+கை நீளம்+5"+0.25 மீ (38-40") பின் முதுகு நீளத்தின் இருமடங்கு+ கை நீளம் + 3" பின் முதுகு நீளத்தின் இருமடங்கு+ கை நீளம் + 3"+ 0.30 மீ பின் முதுகு நீளத்தின் இருமடங்கு+ கை நீளம் + 3"+ 0.50 மீ 8 சல்வார் நீளம் இருமடங்கு + 10" (அ) 3 மீட்டர் நீளம் இருமடங்கு + 10" (அ) 3 மீட்டர் + 0.25 மீ நீளம் இருமடங்கு + 10" (அ) 3 மீட்ட ர் + 0.25 மீ 9 கமீஸ் நீளம் இருமடங்கு +10" (2மீட்ட ர்) + 0.5மீ நீளம் இருமடங்கு +10" (2மீட்ட ர்) + 0.5மீ நீளம் இருமடங்கு +10" (2மீட்ட ர்) + 0.5மீ 10 ஹவுஸ் கோட் ஆடை நீளத்தின் இருமடங்கு + கை நீளம் + 12"+ 0.5மீ ஆடை நீளத்தின் இருமடங்கு + கை நீளம் + 12"+ 0.5மீ ஆடை நீளத்தின் இருமடங்கு + கை நீளம் + 12"+ 0.5மீ 11 பேண்ட் பேண்ட் நீளத்தில் 2 மடங்கு +இடுப்பு பட்டை அகலம் (4”) +6” பேண்ட் நீளத்தில்2 மடங்கு +இடுப்புபட்டை அகலம்(4”)+6” பேண்ட் நீளத்தில் 2 மடங்கு +இடுப்பு பட்டை அகலம் (4”) +6” 12 சட்டை a) ஸ்லாக் சட்டை(6 வயது) சட்டை நீளம் + 6" + கை நீளம்+0.25 மீ சட்டை நீளம் + 6" + கை நீளம்+0.25 மீ சட்டை நீளம் + 6" + கை நீளம்+0.50 மீ b) முழு சட்டை (6 வயது) நீளம் இருமடங்கு + 8" நீளம் இருமடங்கு + 8" நீளம் இருமடங்கு + 8" c) T-சர்ட் முழு நீளம் இருமடங்கு + கை நீளம் + 4"+0.25 மீ முழு நீளம் இருமடங்கு + கை நீளம் + 4"+0.25 மீ முழு நீளம் இருமடங்கு + கை நீளம் + 4"+0.50 மீ 13 குர்தா (6வயது) குர்தா நீளம் + 2"+0.30 மீ குர்தா நீளம் + 2"+0.30 மீ குர்தா நீளம் + 2"+0.50 மீ 14 பைஜாமா (10 வயது) முழு நீளம் இருமடங்கு +6" முழு நீளம் இருமடங்கு +6" முழு நீளம் இருமடங்கு +6" 15 பாவாடை(6 Gore or 4 Gore) பாவாடை நீளம் இருமடங்கு +2.10 மீ பாவாடை நீளம் இருமடங்கு +2.10 மீ பாவாடை நீளம் இருமடங்கு +2.10 மீ 16 சன் சூட் (3 வயது) a) கையற்ற சட்டை+காலர் சட்டை நீளம் + 6" + 0.10 மீ சட்டை நீளம் + 6" + 0.10 மீ சட்டை நீளம் + 6" + 0.10 மீ b) கை + மீட்டர்பேன் காலர் சட்டை நீளம் + கை நீளம் + 8" +0.15மீ சட்டை நீளம் + கை நீளம் + 8" +0.15மீ சட்டை நீளம் + கை நீளம் + 8" +0.30மீ c) யோக்+கை+ காலர்+ கேதர்டு+ப்ளீட் சட்டை நீளம் இருமடங்கு +6"+020மீ சட்டைநீளம் இருமடங்கு +6"+025மீ சட்டை நீளம் இருமடங்கு +6+0.25மீ 17 நிக்கர் நிக்கர் நீலம் + 6” நிக்கர் நீலம் + 6” நிக்கர் நீலம் + 6” ஆடையை உருவாக்குதல் ஆடையை உருவாக்குதல் என்பது திறமை, அனுபவம், மிகுந்த பயிற்சி மற்றும் மனமார்ந்த விருப்பமிக்க ஒரு உன்னத கலை ஆகும். ஒருவர் மெதுவாக படிப்படியாக ஆடைகள் மீண்டும், மீண்டும் தைத்துப் பார்த்து தெரிந்து கொண்டு கச்சிதமான பொருந்தக்கூடிய ஆடைகளை உருவாக்க வேண்டும். ஆடையை உருவாக்குதலில் பின்பற்ற வேண்டிய படிகள் • ஆடையை உருவாக்குதலில் உள்ள மிக முக்கியமான படிகள் பின்வருவன பொதுவானவை) *அனைத்து மாதிரிகளும் வெட்டப்பட்டுள்ளனவா என சரிபார்க்கவும். • மாதிரிகளை மடித்து பத்திரப்படுத்தவும். * தைக்கும்போது மட்டுமே மாதிரிகளை விரித்து பயன்படுத்தவும் *தைப்பதற்கு முன்பு நாட்ச்சஸ் (Notches) சரிபார்க்கவும். * வளைகோடுகள் ஒழுங்காக தைக்கப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும். * தையலுக்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களை சேகரித்துக் கொண்ட பிறகு தைக்க தொடங்கவும். உம். காலருக்கு (கழுத்துபட்டை வேண்டிய லைனிங் துணி திறப்புகளுக்கான கருவிகள் அலங்கரிக்க லேஸ்கள், அப்ளிக்குகள் *தைப்பதற்கு பயன்படும் நூலை சரிபார்க்கவும். ஆடையின் நிறம் இரண்டிற்கு மேம்பட்டிருந்தால், அழுத்தமான நிற நூலை தேர்வு செய்யவும். *பாபின்களில் பொருத்தமான நிறத்தில் நூலினை சுற்றவும். *தையல் இயந்திரத்திற்கு எண்ணெய் விட்டு ஒரு பழைய துணியினை பயன்படுத்தி வைத்து பார்க்க வும். *இயந்திரத்தில் சுமூகமான செயல்பாட்டினை சரிபார்க்கவும். *இயந்திரத்தினை சுத்தமாக துடைக்கவும். குறிப்பாக பாபின் மற்றும் துணியை நகர்த்தும் பற்கள் (feed back) ஆடையின் மேல்பகுதியை தைக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய படிகள் • கழுத்து வளைவு பகுதியில் தோள் பாகங்களை இணைக்கவும். *பக்க இணைப்பை இணைத்துக் கொள்ளவும். *திறப்பு பாகத்தை (placket) முடித்துக் கொள்ளவும். *கழுத்து வளைவை முடிக்கவும். • கை பகுதியின் பக்க இணைப்பை இணைக்கவும். *முன் மற்றும் பின் பகுதி கைபாகங்களை சரிபார்த்து உடல் பாகத்துடன் இணைக்கவும். *ஓரங்களை தைத்து முடிக்கவும். *திறப்பு கருவிகளை தைக்கவும். *நன்கு இஸ்திரி இடவும். மாதிரியில் டார்ட்கள் வரைந்திருப்பின் அதனை முதலில் தைக்கவும் (படம் 11.1). ஆடையின் கீழ் பகுதியை தைக்கும் பெதழுது கடைபிடிக்க வேண்டிய படிகள் (பாவாடை உருவ வடிவமாதிரி) *பார்ட்களை தைக்கவும் *திறப்பு பாகத்தை தைக்கவும் *பக்க இணைப்புகளை இணைக்கவும் • இடுப்பு பட்டையை இணைக்கவும் *திறப்பு கருவியை தைக்கவும் *இஸ்திரி செய்யவும் *முன்புற திறப்பு பாகத்தை தைக்கவும் *யோக் பகுதியை பின்புறம் இணைக்கவும் (படம் 11.2) சட்டை உருவாக்கும் முறை சட்டையின் பகுதிகள் *முன்பக்க மாதிரி *பின்பக்க மாதிரி *யோக் மாதிரி *காலர் பட்டை மாதிரி *சட்டை பை மாதிரி பின்புறம் யோக்கை இணைக்கும் முறை • சட்டையின் பின்பகுதித் துண்டு மற்றும் யோக் பகுதியில் மத்திய நாட்சுகளை குறிக்கவும். *சட்டையின் பின்பகுதித் துண்டின் முன் பக்கமும் பின் பக்கமும் யோக்குகளை பொருத்தவும். *முனையிலிருந்து 2 தையலை போடவும். *பின் யோக்கை திருப்பி மேல் தையலிடவும். • முன் மற்றும் பின் தோள் இணைப்புகளை இணைக்கவும். • கழுத்து வளைவில் காலரை சட்டை உருவாக்கத்தில் கொடுத்துள்ளபடி இணைக்கவும். சட்டை காலர் தைக்கும் முறை • காலர் இரண்டு பகுதிகளை கொண்டது (1) காலர் பட்டை (2) காலர் துண்டு • இவை இரண்டும் இணைந்தாற்போல் மாதிரியை தயாரிக்கவும். *பொதுவாக காலர்கள் பொய்த்துண்டு இணைத்து நிறைவு செய்யப்படுகிறது. (Interfacing) *பொய்த்துண்டுகள் சுருங்காமல் இருப்பதற்காக அதை முதலிலேயே துவைத்து படிமானப்படுத்த வேண்டும். *பொய்த்துண்டின் ஒரு பகுதியை காலரின் கீழ்பக்கத்தில் பாக் செய்யவும். பின் காலரின் மற்றொரு பகுதியையும் இணைத்து மூன்றையும் தைக்கவும். *இணைப்புப் பகுதியின் ஓரங்களில் அதிகப்படியாக உள்ள துணியை நீக்கிவிட்டு காலரை முன்பக்கம் திருப்பவும். • காலரின் வெளிப்புற முனையிலிருந்து 1/4” விட்டு முழுவதுமாக மேல் தையல் போடவும். *காலர் பட்டையின் உள் மற்றும் வெளிப்பகுதியின் முன் மையப்பகுதி மற்றும் பின் மையப்பகுதி குறியீடுகளோடு காலர் பொருந்துமாறு இணைப்புப் பகுதியில் வைத்து தைக்கவும். *காலர் பட்டையின் உள் பகுதியை சட்டையின் கழுத்து வளைவுடன் டாக் செய்து தைக்கவும். *மேல்பட்டையின் இணைப்புப் பகுதியை மடித்து, இணைப்புக் கோட்டுடன் பாக் செய்யவும். பின்பு காலர் பட்டையை சுற்றி மேல் தையலிடவும். *கையினுடைய ஓரங்களை முடிக்கவும். *கைகளை சட்டையுடன் இணைக்கவும். *கையிலிருந்து சட்டையின் இணைப்புப் பகுதி வரை பக்கவாட்டில் தைக்கவும். • சட்டையின் ஹெம்மை நிறைவு செய்யவும். * பொத்தான்கள் மற்றும் பொத்தான் துவரங்கள் அமைத்து சட்டையை மடிக்கவும் (படம் 11.3). தையலுக்கான குறிப்புகள் 1. இணைப்பு பகுதி அனைத்திற்கும் இரு தையல்கள் இட வேண்டும். இவ்விரு தையல்கள், இணைப்புத் தையல்கள் எளிதில் பிரியாமல் இருக்க உதவி செய்யும். 2. தோள் இணைப்பை தைக்கும்பொழுது, கை வளைவில் இருந்து ஆரம்பித்து கழுத்து வளைவில் முடித்து திருப்பி இரண்டாவது தையலை இணைப்பு கோட்டிலிருந்து விலகாதவாறு போடவும். 3. எல்லா நேரான இணைப்புகளும் ஒழுங்கான நேர்கோட்டில் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆடை தைத்தபின் நிறைவு ஒழுங்காக அமையாது. 4. பொய்த்துண்டை (Facing) பயன்படுத்தும் போது அதனை மேஜை மீது வைத்து சுருக்கமில்லாமல் தைக்கவும். 5. சுருக்கங்கள் அமைக்கும் பொழுது பெரிய தையல்களை பயன்படுத்தவும். இதற்கு நூலை இறுக்கி பிடிக்கும் தகட்டை சிறிது தளர்த்தி இருவரிசையில் தையலிடவும். ஒரு வரிசை இணைப்புக் கோட்டிலும், மற்றொன்று இணைப்புக் கோட்டிற்கு 0.56 செ.மீ மேலாகவும். மேலே உள்ள நூலை ஒரு கட்டையில் சுற்றிக்கொண்டு பாபின் நூலை தேவையான அளவிற்கு இழுக்கவும். நூல் வெட்டுப்படாமல் இருப்பதற்கு துணியை மென்மையாக சுருக்கவும். 6. சுருக்கங்கள் ஒரே அளவுடையதாக இருப்பதற்காகவும், இடத்தை விட்டு நழுவாமல் இருப்பதற்காகவும் தைக்கும்போது சுருக்கங்கள் மேலே இருக்குமாறு தைக்கவும். 7. சட்டை பைகளை தைக்கும்பொழுது, மடிப்புகளை தைக்கும் பொழுதும் உறுதி தன்மைக்கு ஓரங்களில் இரு தையல் இடவும். 8. லேஸ் அல்லது ராபல் இணைக்கும் பொழுது ஓரங்களில் சிறிது சுருக்கம் வைத்து தைக்கவும். 9. நேர் இணைப்பை தைப்பது போலவே வளைந்த இணைப்பையும் ஓரங்களில் சிறிது நாட்சுகள்வைத்து தைப்பதன் மூலம் அது சீராக அமைய உதவும். தையற்காரர் சுத்தியை பயன்படுத்தி வளைவுகளை சீராக அமைக்கலாம். 10.குறுக்குத்துண்டு (Bias) தைக்கும்பொழுது தையலை சிறிது தளர்த்தி வைக்கவும். இது நூல் இழுபடாமல் இருக்க உதவும். குறுக்குத் துண்டை தைக்கும் பொழுது அதன் ஓரங்களை இழுக்கக்கூடாது. அவ்வாறு ஏற்படின் அவ்வோரங்கள் நிரந்தரமாக நீண்டுவிடும். ஒரு நேர்முனையில் குறுக்குத்துண்டை இணைக்கும் பொழுது குறுக்குத் துண்டை கீழ்பகுதியில் வைத்து இணைக்கவும். 11. ஹெம் செய்யும்பொழுது பாவாடையின் கீழ் ஓரம் நேராக இருக்குமாறு கவனிக்கவும். வளைவு ஓரங்கள் ஹெம்மிங்கை பாதிக்கும். வளைவுகளில் குறுகிய ஹெம்மங்கள் பயன்படுத்துவது சுலபமாக மடிக்க உதவும். அகலமான ஹெம்களை கீழே கொடுத்துள்ள குறிப்புகள்படி செய்யலாம். i) A லைன் ஆடைகள் அல்லது பாவாடைகளில், பக்கவாட்டு இணைப்பு கோடுகளை வெட்டுவதற்கு முன்பே ஹெம்மை தயாரிக்க வேண்டும். இதனால் பக்க இணைப்பின் சாய்வுடன் ஹெம் சிறப்பாக பொருந்தும். ii) அதிகப்படியான துணியில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க ஹெம்மை சிறிது சுருக்கங்களுடன் தைக்கவும். இந்த சுருக்கப்பட்ட ஹெம் குறுக்குத் துண்டுடன் (Bias tape) இணைக்கப்பட்டு பின்பு துணியுடன் ஹெம் செய்யப்படுகிறது. iii) ஹெம் முனைகளில் சீரான இடைவெளியில் குறுகலான டாரட்டுகள் தைக்கலாம். இதனை குறுக்குத் துண்டுடன் இணைத்து, துணியுடன் ஹெம் செய்யலாம். முடிவுரை இப்பாடப்பகுதியானது பொதுவாக உபயோகிக்கப்படும் உடைகளுக்குத் தேவையான துணிகளை கணக்கிட்டு வாங்கவும், அடிப்படை தையல் சூத்திரங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இப்பாடப்பிரிவில் பல்வேறு பகுதிகளை கற்பதனால், ஒருவர் நாகரீகப் பாங்கிற்கல்லாமல், தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியாகவும்இனிமையாகவும் ஆடையை வடிவமைக்கக்கூடிய தன்னம்பிக்கையை பெறுவர். ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்