முன்னுரை ஆடை வாணிபம் ஜவுளித் துறையில் வடிவமைப்பு மாற்றங்களுடன் ஜவுளிகள், ஆடைகள், உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் ஆடை உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் நோக்கில் இயங்கி வருகின்றது. ஜவுளி தொழிற்சாலை பல வகையான உற்பத்தி முறையை கையாள்கின்றது. ஆடை வாணிபம் என்பது நுகர்வோர்க்கு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நுட்பங்களைக் குறிக்கிறது. வாணிபர்கள் என்பவர்கள் உற்பத்தியாளர்களிடம் பொருளை வாங்கி கடைக்காரர்களிடம் விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி பலவகையான யுக்திகளை கையாண்டு கடைக்காரர்களை நம்பிக்கையூட்டியும், ஆறுதல் அளித்தும் பொருட்களை வாங்க வைக்கிறார்கள். நாகரீக வாணிபர்கள் என்று கருதப்படும் ஆடை வாணிபர்கள் சில்லறை வர்த்தக சூழ்நிலையில், பொருட்காட்சி அலமாரிகளை அமைத்து விற்பனையை பெருக்க உருவாக்குதல் முதல், அறையில் விற்பனையை நடைமுறைப்படுத்துதலிலும் ஈடுபட்டு தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். கடை உள் அமைப்பை மேம்படுத்தி பொருட்களை காட்சி வடிவமாக மாற்ற மனித உருவ பொம்மைகளை கொண்டும், நாகரீக பாணியில் காட்சிகளை அமைத்தும் கடைகளின் விற்பனை அதிகரிக்க காரணமாகிறார்கள். வரையறுத்தல் அடையாளம் காணப்பட்ட சந்தை இலக்கிற்கு திட்டமிடுதல், வளர்ச்சியடைய செய்தல் மற்றும் அர்ப்பணித்து, விலை நிர்ணயம் செய்வதுடன், பொருட்களை வகைப்படுத்தியும் பகட்டான விதத்தில் உருவாக்கியும், குறிப்பிட்ட காலத்தில் விற்பனை செய்தும், திறமையாக கவர்ந்திழுக்கும் பொருட்காட்சி விளம்பரங்களின் மூலம் விற்பனை செய்வதை வாணிபம் எனலாம். வாணிபர்கள் அடிப்படைத் தேவையான பொருட்களையோ, ஆடை உற்பத்தி தொழிலிலோ அல்லது ஆடை வியாபாரத்திலோ சில்லறை வியாபாரம் பண்ணக் கூடியவராகக் கூட இருக்கலாம். ஒரு பொருளின் வரிசை தரத்திற்கு முதுகுத் தண்டாய் இருப்பது வாணிபம். ஆடை உற்பத்தியின் அடிப்படை தொழில்நுட்பம் வழி வழியாகவே, ஜவுளி ஆடை உற்பத்தியாலைகள் தனித்தனியாக, ஆனால் ஒன்றை சார்ந்த ஒன்றாக, துணி உற்பத்தித் துறையில் இயங்கும் தொழிற்சாலைகளும், ஆடை உற்பத்தி ஆலையில் இயங்கும் தொழிற்சாலைகளாகவும் செயல்பட்டு வருகின்றன. பஞ்சு /நார் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி மூலப்பொருளை நூல் சரடு தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்கின்றனர். அங்கு தயாரிக்கப்பட்ட நூல் சரடு நெசவாலைகளுக்கும், பின்னல் வேலை ஆலைகளுக்கும் விற்கப்பட்டு அதில் தயாரான துணியானது துணி பூர்த்தியாளருக்கு விற்கப்பட்டு பின் ஆடை தயாரிக்கப்படுவதற்கு விற்கப்படுகிறது. இன்று, துணி மற்றும் ஆடை வர்த்தக சந்தையானது உலகமயமாக்கலின் காரணமாக மிகவும் போட்டியை கொண்ட சந்தையாக திகழ்வதால், இந்தத் துறையில் பிரத்யேக, விசேஷ தன்மையும் சந்தை இலக்கை அடைய வியாபார நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். சிறு சிறு ஆலைகளாக இயங்கி வந்த துறையில் இப்போது ஒருங்கிணைந்து பல பெரிய ஆலைகள் உருவாகியுள்ளது. புதுப்புது உற்பத்தி தொழில்நுட்பங்கள், புதிய கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் என புதுமைகளை புகுத்தி விரைந்து சுதாரிக்கும் தொடர் இணைப்பின் மூலம் உற்பத்தியாளர்களுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி தான் உலக சந்தையில் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது என்பதை வியாபார குழுமங்கள் உணர்கின்றனர். தொழிற்சாலை தர வகைப்பாட்டின் படி ஜவுளித் துறையில் ஒன்பது தனி ஜவுளி ஆலை உபபிரிவுகளும், (3 இலக்கங்கள்) 23 சந்தை பாகங்களும் (4 இலக்கம்) இருப்பதாக பிரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 6134 ஜவுளி இயக்கத்திலுள்ள ஆலைகள் கீழ் வரும் 9 தொழிற்சாலை உபபிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் அமர்வு பெற்றிருக்கும். ஜவுளி ஆலை பிரிவுகளாக அகன்ற நெசவு கொண்ட மில்கள்: பருத்தி. அகன்ற நெசவு கொண்ட மில்கள்: மனிதனால் உருவாக்கப்படும் நார் மற்றும் பட்டு. அகன்ற நெசவு கொண்ட மில்கள்: கம்பளியில் சாயமிடுதல், இறுதி வடிவம் கொடுத்து முடித்தல். குறுகிய நெசவு துணிகள் மற்றும் சிறிய மில்கள்: பருத்தி, கம்பளி, பட்டு மற்றும் கைகளால் பின்னப்படும் நார்கள். பின்னலாடை மில்கள்: பெண்களுக்கான முழு நீள மற்றும் கால் முட்டி வரை அளவு கொண்ட பின்னல் ஆடை வகை, மேல் ஜோடு வகைகள், காலுறை, வெளியாடை, உள்ளாடை, இரவு ஆடை, குறுக்கு நூல் இழை வகைகள், தட்டையான பாவு, ஊடை நூல், பின்னல் நெசவு ஆடைகள், மற்றும் கையுறைகள். துணிகளுக்கு சாயமிடுதல் மற்றம் இறுதி வடிவம் கொடுத்தல்: அகன்ற பருத்தி நெசவு துணிகள், நாரினால் கைகளினால் தயாரிக்கப்படும் அகன்ற நெசவு துணிகள் மற்றும் பட்டுக்கு இறுதி வடிவம் கொடுப்பவர்கள் இதில் அடங்கும். கம்பளி ஆடைகள் மற்றும் பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் இதில் அடங்காது. தரை விரிப்பு கம்பளம் மற்றும் பாய்கள். நூல் இழை மற்றும் நூல் ஆலைகள். இதர ஜவுளி ஆலைகள்: ரப்பர் அல்லாத பூச்சு உடைகள், கட்டு கயிறுகள், நெசவில்லாத துணிகள், மெல்லிய கயிறுகள், சுற்றுக் கயிறுகள் (அ) திரித்த கயிறுகள், இதர பொருட்களான நார், சணல், பஞ்சு அடைத்தல், திரை, தரை விரிப்புகள், மற்றும் கழிவுகளையும், நார் கழிவுகளையும் சுத்தப்படுத்தி மறு பயன்பாட்டிற்கு வழி செய்யும் ஆலைகள். தொழிற்சாலை தர வகைப்பாட்டின் படி ஆடைகள் ஒன்பது பிரிவுகளையும், பிற நிறைவு செய்யப்பட்ட பொருட்களின் உட்பிரிவுகளையும் கொண்டது. மேலும் விரிவான பொருட்களின் வகைகள் 31 சந்தை பிரிவுகளை வரையறுத்துள்ளது. ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான முழுக் கால் சட்டை, அங்கி மற்றும் மேல் அங்கி. ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உடைகள், பணி உடைகள், மேல் சட்டை, உள்ளாடை, இரவு ஆடை முழுக் கால் சட்டை கழுத்தில் அணியக் கூடியன, அரைக் கால் சட்டை. பெண்கள் மற்றும் சிறுமியருக்கான வெளியாடைகள், மேல் சட்டை கால் சட்டை, முட்டிக் கால் அளவு வரை கொண்ட தழுவல் உடைகள் (Skirts), பெண்கள், சிறுமியர்கள் மற்றும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள், இரவு உடைகள், பிரா மற்றும் இதர உடைகள். தொப்பி, குல்லாக்கள். மிருகங்களின் மிருதுவான ரோமங்களிலிருந்து தயாரிக்கபடும் உடைகள். இதர உடைகள் மற்றும் பாதுகாப்பு உடைகளான பணி உடைகள், பணி கையுறை, தண்ணீர் புகாத வெளியாடைகள், தோல் மற்றும் செம்மறி ஆட்டு உடைகள், உடை பட்டைகள், தொங்கல்கள், கைக்குட்டை மற்றும் இதர உடைகள். இதர நெய்யப்பட்ட துணி பொருட்களான ஜன்னல் திரைகள், கதவு திரைகள், வீட்டுத் திரைகள், துணிப் பைகள், கேன்வாஸ் வகை துணிகள், அலங்கார தையல்கள், தானியங்கு வெட்டுதல், இயந்திர எம்பராயிடரிகள் மற்றும் இதர நெய்யப்பட்ட துணி பொருட்கள். கண்காட்சி வாணிபம் சில்லரை மையங்களில் பொருட்களை காட்சிப் பொருளாக வைத்து வியாபார பெருக்கத்தை முறைப்படுத்தும் செயல்பாட்டை கண்காட்சி வாணிபம் எனலாம். (நியூ ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி, ஆப் இங்கிலீஷ், 1999, ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ்). கடைகளின் சூழ்நிலை, அர்பணிக்கப்படும் இடத்தின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொருட்களை பார்வை பொருளாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் காட்சி பொருளாக வைத்து வியாபாரத்தை பெருக்குவதே இதன் நோக்கம். இந்த நடவடிக்கையில் வடிவமைப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், வாணிப மேலாளர்கள், வாடிக்கையாளர்கள், கண்காட்சி வாணிப இயக்கரின் கூட்டு முயற்சி தேவைப்படுகின்றது. கண்காட்சி வாணிபத்தின் அடிப்படைகள் கடைகளின் தரைப்படத்தை வடிவமைத்து, பொருட்களை வகைப்படுத்தி, அனைவரையும் ஈர்க்க வைக்கும் அளவிற்கு காட்சிகளை செய்து வியாபாரத்தை அதிகப்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும். ஆடைகளின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை மனித உருவ பொம்மைகளுக்கு பொருத்தி வியாபாரத்தை பெருக்குவது என்பதை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். மேனிக்குவின் (Mannequin) என்பது பொம்மைகளுக்கு மனித உடைகளை அணிவித்து காட்சி பொருளாக வைத்தல் வாய்ப்புகள் கண்காட்சி வாணிபத்தில் கீழ்காணும் காரணிகளாக அனைத்தும் அல்லது சிலதோ இடம் பெறலாம். நிலையாக பொருத்தப்பட்ட பொருள் மற்றும் துணிகளை வெட்டி பொருத்தி பயன்படுத்த தேர்ந்தெடுத்தல். பொருட்களை அர்ப்பணிக்கும் முறை. அலமாரி அல்லாத கண்காட்சியை உருவாக்குதல் (நிறைவாக வாங்குதலை ஊக்குவித்தல்). கடையின் தரை வடிவமைப்பை தேர்ந்தெடுத்தல். உடனடி விற்பனைக்காக “தள்ளுபடி விலையில்” விற்பனை செய்தல். அடைப்பு கண்காட்சிகளை ஏற்படுத்துதல். பொருத்துதல் எந்த முறையில் பொருட்களை அர்ப்பணிப்பு செய்து காட்சி பொருளாக காண்பிக்க முயல்கின்றோமோ அது தான் பொருத்துதல் சாதனங்களை முடிவு செய்யும். பொருட்கள் அர்ப்பணிப்பு ஏற்கெனவே இருக்கும் பொருத்துதல் வசதிகள் எவ்வாறு உள்ளதோ அதன்படி தான் பொருட்களை அர்ப்பணிக்க முடியும். செங்குத்தாக அடுக்குதல் (உதாரணம் பத்திரிகைகள், குறுந்தகடுகள்) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குதல் (மடித்த உடைகள், டின்னில் அடைத்த உணவுப் பண்டங்கள்) தொங்கவிடல் - தொங்கல்களில் அல்லது கொக்கிகளில் தொங்கவிடல் அட்டையின் மீது (அ) பாலிதீன் குமிழியில் இணைக்கப்பட்ட பொருட்கள்) கடை தரைப்படம் கடையின் அளவு மற்றும் அதன் உள் உருவத்தை பொறுத்து கடையின் தரைப்படம் அமைந்திருக்கும். பொருட்களை எவ்வாறு வகைப்படுத்த வேண்டும், பல வகையான விதவிதமான பொருட்களை எவ்வாறு, எங்கு வைக்க வேண்டும் என்பதும் தரைப்படத்தை தீர்மானிக்கும் ஒன்றாகும். மற்றும் அலமாரிகளும், நிலையான பொருத்துதல்களும் தரைப்படத்திற்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் பொருட்களாக அடையலாம். பல வழிமுறைகளில் தரைப்படத்தை உருவாக்கலாம் என்றாலும், அவைகள் கடையினுள் மக்களின் போக்குவரத்து தங்கு தடையில்லாமல் எல்லா இடத்திற்கும் எளிதில் அடையும்படி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அலமாரியில் வைக்கப்படாத காட்சி பொருட்கள் ஒரு பொருளை உபயோகப்படுத்தும் போது எவ்வாறு இருக்கும் என்பதை காண்பிப்பது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் யுக்தியாகும். காட்சிப் பொருட்கள் ஒருவரது விருப்பத்தையும் தூண்டுதலையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டதாக கருதப்பட வேண்டும். அடைத்த ஜன்னல் காட்சி பொருட்கள் கண்ணாடி ஜன்னல்களில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்ட பொருட்களானது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை பற்றியும், கடையின் சூழ்நிலை பற்றியும் தகவல் பரிமாற்றத்தை எளிதில் அளித்து விடும். வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஈர்த்து வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் தூண்டுகோலாக அமையுமென்பது மிகையாகாது. வாடிக்கையாளர்களின் தரத்திற்கு ஏற்ப இந்த ஜன்னல் காட்சி பொருட்கள் அமைக்கப்பட்டு கடையின் அந்தஸ்தையும் கூட்ட வேண்டியது தலையாய கடமையாகும். சாலை நடைபாதையாளர்களுக்கு பொழுது போக்கு காட்சி பொருளாக மட்டும் இல்லாமல் பொருட்களையும் சேவைகளையும், அதன் விலை, தரம் பற்றியும் இது பிரதிபலிக்கும், நவநாகரீக சில்லறை விற்பனையாளர்கள் தங்களது பொருட்களை வாரத்திற்கு ஒரு முறையாவது மாற்றியமைத்து காட்சிப் பொருட்களாக வாடிக்கையாளர்களின் பார்வைக்கு அர்ப்பணிப்பர். வருடத்தில் எந்த மாதத்தில், எந்த விழா காலத்தில் இருக்கிறோம் என்பதை ஒரு வாடிக்கையாளரால் யூகிக்க முடியும் அளவிற்கு இது திகழும். பள்ளிக்கு திரும்பும் காலம், கோடை காலம், குளிர் காலம், மழைக் காலம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், புது வருடம், தீபாவளி, காதலர்கள் தினம் என்று வாடிக்கையாளர்கள் அறியும்படி ஜன்னல் காட்சி பொருட்கள் அமைந்திருக்கும். நாகரீக வாணிபம் உடைகளின் விற்பனையை அதிகரிப்பு செய்தல், உடைகளில் வடிவமைப்பாளர்களின் தேவையை பூர்த்தி செய்தல், வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்தல், விளம்பரம் செய்தல், விளம்பர பலகைகளை பொருத்துதல், உற்பத்தியாளர்களையும் சந்தைப்படுத்துபவர்களையும் இயக்குவது, புதிய விற்பனை யுக்திகளை கையாள்வது ஆகியவை நாகரீக வாணிபத்தில் அடங்கும். விற்பனை செய்யப்படும் பொருள் எளிதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வண்ணமும், அதன் தோற்றம் கவரும்படியும் அமையச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும். நாகரீக சந்தைபடுத்துதலும், நாகரீக வாணிபமும் கை கோர்த்து பயணிக்கும். நாகரீக வாணிபர்கள் மக்களின் நடை, உடை, பாவனைகளை யூகித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் நாகரீக சந்தைபடுத்துவோரோ, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதன்படி விளம்பரம் செய்தி கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்வார்கள். நாகரீக வாணிபர்கள் தான் உடைகளை வாங்கி, கடைகளுக்கு விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்பார்கள். நாகரீக வாணிபர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும் படைப்பாளியாகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. வியாபார வல்லுநராகவும் மற்றும் நாகரீக ரசனை கொண்ட கலவையாக இருப்பது நாகரீக வாணிபர்களின் முக்கிய அம்சமாகும். பருவகால நாகரீக வாணிபம் நடப்பு சந்தை நிலவரப்படியும் பருவகால நிலவரப்படியும் அல்லது நடப்பு நாகரீக நிலவரப்படியும் பொருட்களை நிர்வகித்து பொருட்களின் கையிருப்பை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பருவகால வாணிபம் இந்திய சில்லரை வியாபாரத்தின் மந்திரமாக விளங்குவது நிதர்சனம். பருவகால வாணிபத்தில் சில அனுகூலங்களும் வரம்புகளும் இருக்கும். இதைப் பற்றி கீழ் காணும் விவரங்களில் ஆராய்வோம். துல்லியமாக கணித்தல் பருவகால விற்பனையை அதிகரிக்க வேண்டுமெனில் சந்தை நடைமுறை மற்றும் தேவைகளை துல்லியமாக முன்கூட்டியை கணித்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். தக்க தருணம் பருவகால வாணிபம் வெற்றியடைய தக்க தருணத்தை தேர்ந்தெடுப்பது அவசியம். பொருளின் சந்தை நிலவரத் தேவையை முன்கூட்டியே இருப்பில் வைத்திருப்பது அவசியம். காலாவதியான பொருட்களை இருப்பில் வைத்திருக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். வாடிக்கையாளர்கள் பலம் சில சமயங்களில் நடைமுறையில் இருக்கும் நாகரீக பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வகையான வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அதே போல் மற்ற பொருள்கள் பெரும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். இதை மனதில் கொண்டு கையிருப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கையிருப்பையோ அல்லது குறைந்த கையிருப்பையோ வைத்துக் கொள்ளக் கூடாது. மேலாண்மையில் ஏற்படும் பிரச்சனைகள் எந்த வகையான பொருட்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பதனை பருவகால வாணிபம் வெற்றிகரமாக அமையும் என்பதனை திட்டமிட்டு கணித்து வைத்திருக்க வேண்டும். அதிகப்படியான சரக்குகள் சேர்ந்துவிட்டால், சரக்குகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும், தள்ளுபடி விற்பனை மற்றும் வேறு ஆற்றல் மிகு வழிகளை வியாபாரச் சந்தையில் நடைமுறை படுத்த வேண்டும். ஒரு சில சில்லரை வியாபாரிகள் நன்கு விவரமாக ஆண்டு முழுவதும் தேவைப்படும் முக்கியப் பொருட்கள் மற்றும் பருவகால பொருட்கள் என பகுதிகளை வைத்திருப்பார்கள். முக்கியப் பொருட்கள் என்பன அடிப்படையான அல்லது முதல் தரமான பொருட்கள் எனவும், பருவகால பொருட்கள் என்பன தற்சமயம் நாகரீக பொருட்களாக இருப்பவையாக சில்லரை வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுபவை ஆகும். ஆடைகளின் தர நிர்வாகம் அதிக செலவு செய்து தான் தரத்தை கொடுக்க முடியும் என்பதில்லை. உற்பத்தியாளர்களும் சில்லறை வியாபாரிகளும் பல்வேறு விலை மட்டங்களில் விற்கும் பொருள்களின் தரத்தை பற்றி விளக்கியிருப்பார்கள். அனைத்து விலை மட்டங்களிலும் தரமான பொருள்கள் கிடைக்கும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். துணியானது நூல் இழைகளால் நெசவு செய்யப்படுகிறது. நூலிழைகள் மேலிருந்து கீழாகவோ அல்லது குறுக்காகவோ செல்லும். துணியிலிருந்து ஆடை உருவாக்கத்திற்கு வெட்டும் போது மேலிருந்து கீழாகவோ அல்லது குறுக்காகவோ தான் வெட்டப்பட வேண்டும். அவ்வாறு சரியாக வெட்டவில்லை எனில் துணி உடையை சுற்றி முறுக்கிக் கொள்ள காரணமாகிவிடும். இதுவே ஆஃப் கிரைன் (off grain) என்றும் சரி செய்ய முடியாதது என்றும் கூறப்படுகிறது. ஆடைகளுக்கு அடிப்படையானது துணி. துணி நெசவின் நயம் சரியான பொருத்தத்தை கொடுக்கும். உற்பத்தியாளர்கள் சில சமயங்களில் இலாப நோக்கில் சீரிய வரையறுக்கப்பட்ட முறையில் துணியை வெட்டாமல் செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் வெட்டுவார்கள். இப்படி வெட்டப்படும் துணியானது தைப்பதற்கு கடினம் மட்டுமல்லாமல் அதன் உருவமே மாறுபட்டு போய்விடும். ஓரங்கள் ஒழுங்கற்ற முறையிலும் தொய்வு கொடுக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நெசவு நயத்தில் வெட்டப்படும் துணியானது உடையின் தரத்தை மேம்படுத்தும். தரமான ஆடைகள் என்பது அதில் இருக்கும் செங்குத்து மற்றும் படுக்கை கோடுகள் / வடிவங்கள் இரண்டு திசைகளிலும் ஒத்துப் போய் இருக்க வேண்டும். இந்த ஒத்துப் போகும் விஷயம் தான் தரத்தை கூறும். ஆனால் இதற்கு அதிகப்படியான துணிகளும், வெட்டுதல் மற்றும் தையலுக்கு அதிக மணி நேரமும் செலவழிக்க வேண்டும். ஆடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் துணிகள், நூல், பொத்தான்கள், ரப்பர் பொருட்கள், அடைப்பான்களின் (zip) வண்ணங்கள் ஒன்றையொன்று ஒத்துப் போய் இருக்க வேண்டும். அப்படி அமையப் பெற்றால் அதனை தரத்தின் குறியீடாக கொள்ளலாம். துணியின் ஓரங்கள் சீராக இணைத்து தைத்திருக்க வேண்டும். நூல்கள் விளிம்பிலிருந்து வெளிக் காட்டாமலும் அல்லது பிரிந்திருக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆடையினுள் இருக்கும் வடிவமைப்பு அதன் தரத்தை மதிப்பிட உதவும். கழுத்துப் பட்டை (காலர்கள்) உடலில் உராய்வதால் மழுமழுப்பாக இருக்க வேண்டியது அவசியம். கைகள் நீட்டி மடக்குவதற்காக சட்டையின் கை பகுதி போதிய அகலத்துடன் இருக்க வேண்டுமிருப்பதன்றி கைகளை மடக்கும் போது சட்டையின் கை பகுதி மணிக்கட்டு வரை இருக்குமாறு கவனிக்கப்பட வேண்டும். இடுப்பு பகுதி / இடுப்புப் பட்டை மழமழப்பாகவும் உடம்பை சுற்றிலும் சம அளவில் இருக்க வேண்டும். ஹெம் தையல்கள் ஒழுங்காக தைக்கப்பட வேண்டும். அடைப்பிற்கு / மூடுவதற்கு பயன்படுத்தப்படும் பொத்தான்கள், ஜிப்புகள், கொக்கிகள் சரியான முறையில் வேலை செய்ய வேண்டியது மட்டுமின்றி நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டதாகவும் இருக்க வேண்டும். துணிகள் பழையதாவதின் காரணத்தினால் அடைப்புகளில் “இடைவெளி” வரக் கூடாது. ஒரு ஆடையின் தரத்தை நிர்ணயிக்க அதனை அணிபவர்க்கு அதன் பொருந்தும் தன்மையை குறியீடாக கொள்ளப்படுகிறது அணிபவர்கள் உட்காரும் போதும், நடக்கும் போதும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதற்கேற்றாற் போல் அதை மாற்றம் செய்யலாம் என்றால் அதற்கு உபரி செலவுகள் செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். பொருட்களின் வாணிபத்தில் இயற்கை மற்றும் காலகட்டத்தின் பங்கு வாணிப செயல்முறைகள் ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனத்தில் வியாபார யுக்தி, பொருட்களின் வகைகள் மற்றும் உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பொறுத்து வேறுபடும். இது நிறுவனங்களின் வாணிபர்கள் திட்டமிடல் வரிசை மற்றும் உருவாக்குதல் மற்றும் கையாண்டு அதை மொத்த வியாபாரிகளுக்கு அர்ப்பணிப்பு செய்வதற்கு பொறுப்பேற்பார்கள். பெரிய நிறுவனங்களின் வாணிபர்கள் திட்டமிடல் வரிசையை மட்டும் கையாள பொறுப்பேற்பார்கள். வடிவமைப்பு ஊழியர்கள் வெளி வரிசை வளர்ச்சியை கவனிப்பார்கள். வாணிப நடவடிக்கைகளின் முதற்கட்ட அங்கங்கள் திட்டமிடல் வரிசை தெளிவான நுணுக்கங்களுடன் வழிகாட்டுதலின் படியும், பொருளின் வளர்ச்சி மேம்பாட்டையும், அர்ப்பணிப்பையும், தேர்ந்து கொள்முதல் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்வதை திட்டமிடல் வரிசை எனலாம். இதன் உப பிரிவுகளாக வாணிப கலவைகளை கண்டறிதல், வாணிப வாய்ப்புகளை முன்கூட்டியே கவனித்தல், வாணிப பட்ஜெட்டை திட்டமிடுதல், வாணிப கூடங்களை மேம்படுத்துதல் போன்றவற்றை கூறலாம். வளர்ச்சி வரிசை எண்ணமிடல், புதிய வடிவமைப்பை உருவாக்குதல், தத்து வரிசையை பின்பற்றுதல் மற்றும் தொழில்நுட்ப வடிவத்தை உருவாக்குதல் ஆகியவற்றை இதன் உப பிரிவுகளாக கூறலாம். சாதிக்கக் கூடிய அல்லது உண்மையான வாணிபத்தை பொருட்களின் வளர்ச்சியின் மூலம் கூட்டமைத்து அல்லது மொத்த வியாபாரத்திற்கான முழுமை பெற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து திட்டமிடல் வரிசையின் நோக்கத்தை பூர்த்தி செய்வதே இதன் கடமையாகும். வாணிப வாய்ப்பை கண்டறிந்து, அதற்கு திட்டமிடல் வரிசைக்கு செயல் வடிவம் கொடுப்பது வளர்ச்சி வரிசையாகும். அர்ப்பணிப்பு வரிசை உள் விற்பனை, மொத்த வியாபாரம் (மொத்த சந்தையில் விற்பது அல்லது விற்பனை பிரதிகளின் மூலம் விற்பது மற்றும் சில்லரை வியாபாரம் (சில்லரை வியாபார கடைகளிடமும், பிற அங்கங்களிலும் அர்ப்பணிப்பது) இதன் உபபிரிவுகளாகும். நடைமுறை சாத்தியக்கூறுகளை கணக்கிட்டு பொருட்களை விற்பனையாகும் பொருளாக மாற்றுவது. அர்ப்பணிக்கப்பட்ட பொருளின் வியாபார அனுகூலங்களை கணக்கிடுதலும், விற்பனை செய்வதும் இதன் நோக்கமாகும். நாகரீகத்தை சந்தைபடுத்துதல் மற்றும் வாணிபங்கள் பொருட்களின் இறுதி விற்பனையை தனி நபர்களிடமும், உச்சவரம்பு வாடிக்கையாளரிடமும் மற்றும் குடும்பத்தாரர்களிடமும் முதற்கண்ணாக எண்ணிக் கொண்டு செயல்படுவதை சில்லரை வியாபாரம் எனலாம். வாடிக்கையாளர்களுக்கு சேவை என்பது சில்லரை வாணிபத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒன்றாகும். சில்லரை வியாபார வளர்ச்சி சில்லரை வியாபாரத்தின் வளர்ச்சியை அனைவரும் மெச்சுகின்றனர். சில்லரை வியாபாரம் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளதை புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன. தனி நபர் வருடாந்திர வருமானத்தையும் பணவீக்கத்தையும் கணக்கிட்டால் ஒவ்வொரு தனி நபர் வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை 1948 ஆம் வருடத்திலிருந்து சீரான வளர்ச்சியை கண்டுள்ளது. சேவை பொருட்களை வாங்கும் தருவாயில் மக்கள் வெள்ளம் இருந்தாலும் சில்லரை விற்பனை பெருகியுள்ளது. சேவை பொருட்களின் விற்பனை அதிகமானால், சில்லரை பொருள் விற்பனையில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்பது புள்ளியியல் கூறும் செய்தி. சிக்கல் நிலை அமெரிக்காவில் நடப்பில் இருக்கும் சில்லரை விற்பனை முறை சமீப வருடங்களில் பன்மடங்கு வளர்ந்திருந்தாலும், அதன் சிக்கலான நிலையும் வளர்ந்திருப்பதை அறியலாம். அதன் சில்லறை விற்பனை வியாபாரத்தில் சில பிரிவுகள் இருந்தாலும் தற்போது பல உப பிரிவுகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு காரணிகள் இந்த மாற்றத்தை கொண்டு வந்தாலும், சில முரண்பாடான விளைவுகளை எதிர்காலத்தில் உருவாக்கலாம். பொருளாதாரம் உச்சத்தில் இருக்கும் போது பல உபரிய மாதிரி பொருட்களையும் சேவைகளையும் பெற முடியும். தனித்தியங்கும் ஒற்றை கடை (Single Store Independent) சில்லரை விற்பனையின் அளவு வளர்ச்சியடையும் போது சில முக்கியமான மற்றும் லாபகரமான விளைவுகளை அனைத்து சில்லரை விற்பனையாளர்களும் அடையலாம். தனித்தியங்கும் ஒற்றை கடையான மாம் மற்றும் பாப் (Mom & Pop) கடையின் சில்லரை விற்பனையின் அளவு வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு கிளைகளைக் கொண்ட கடைகளின் வளர்ச்சியை விட இது குறைவானது என்பது நிதர்சனம். தனித்தியங்கும் கடைகளின் சந்தை பங்கு சீராக குறைந்திருந்தாலும் அதன் வியாபாரம் பெருகியுள்ளது. இந்த வகைக் கடைகள் பிரசித்தமடைந்து வளர்ச்சியடைய பிரத்தியேக இடம், வாணிப தந்திரங்கள் மற்றும் சேவை செய்யும் பங்கு மிக முக்கியம். பல்வேறு கிளைகளை கொண்ட சில்லரை வியாபாரம் இதன் சந்தை பங்கின் வளர்ச்சி எதிர்காலத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தொழில்நுட்ப மேம்பாடுகள், வசதி வாய்ப்புகள், ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகம் ஆகியவை இதன் முக்கிய காரணகர்த்தாவாகவும், குணங்களாகவும் கூறலாம். கிளைகளின் எண்ணிக்கையை பெருக்குவதால் தலைமை வாணிப செயலகத்தின் பணியை கிளைகளிடம் பிரித்துக் கொடுக்கும் திறனை கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் குறித்த (கொள்முதலின்படி) சேவையை எளிதாக செய்வது மட்டுமின்றி இதன் பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது. ஆடை பொருட்களின் விலை நிர்ணயம் ஒரு பொருளுக்கான வாணிபத்திற்கும், உற்பத்தி மற்றும் சந்தைபடுத்தலின் மொத்த முதலீட்டு ஆதாரங்களின் தொகையை செய்முறையின் மூலம் கணக்கிடுவதையே விலை நிர்ணயம் எனக் கூறலாம். ஒரு நிறுவனத்தில் இயங்கும் அனைத்து பிரிவுகளின் கூட்டு செலவீனங்களும் பொருள்களின் விலை நிர்ணயத்தில் அடங்கும். ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் செலவீனங்களை பொறுத்தே அமையும். அதனால் செலவீனங்களை நிர்வகித்து கட்டுக்கடங்க செய்வது மிகவும் முக்கியம். தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை நுணுக்கமாக சேகரித்து அதைக் கொண்டு திறமையாக நிர்வகிப்பது நிறுவனத்தின் வெற்றிக்கு வழி செய்யும். பொருட்களின் விற்பனை விலையானது அனைத்து செலவீனங்களையும் உள்ளடக்கம் கொண்டதானது. அடிப்படை பொருள்களின் விலை, ஊழியர்களின் சம்பளம், தொழிற்கூடம் மற்றும் இதர நிர்வாகச் செலவுகளை உள்ளடக்கிய ஒன்றாகும். உற்பத்தி விலை ஒரு முழுமை பெற்ற பொருளின் உற்பத்திக்கு உண்டாகும் அனைத்து செலவுகளும் உள்ளடக்கம் கொண்டதாகும். நேரடி பொருள் கொள்முதல் விலையில் துணிகள், நூல், கத்தரிப்பு மற்றும் ஆடைகளில் உபயோகிக்கப்பட்ட அலங்கார பொருட்களின் விலைகளும் அடங்கும். நேரடி வேலையாட்களின் விலையில் தொழிற்கூடத்தில் பணிபுரியும் வேலையாட்களின் (கத்தரிப்பாளர்கள், தையற்காரர்கள் ஆடைகளை முழுமை அடைய செய்பவர்கள்) சம்பளம் / கூலி அடக்கமாகும். நேரடி பொருள் கொள்முதல் விலையும், நேரடி வேலையாட்களின் விலையும் மாறுபடும் தன்மை கொண்டதாகும். உற்பத்தி பொருட்களின் அளவை பொறுத்து இவைகள் மாறுபடும். தவிர்க்க முடியாத செலவினங்கள் இந்த வகை செலவீனங்கள் ஒவ்வொரு நிறுவனத்தை பொறுத்து மாறுபடும் தன்மை கொண்டது. மறைமுக ஊழியர்கள் / கூலியாட்கள் பயன்படுத்தப்படும் இடம் இதர செலவீனங்கள் நிறுவனத்தில் சேவை ஊழியர்கள், தரக் கட்டுப்பாட்டுத் துறை ஊழியர்கள், பொருட்களை கையாள்பவர்கள், பழுது பார்க்கும் ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மறைமுக ஊழியர்களின் பட்டியலிலும் இடம் பெறுகிறார்கள். இவர்கள் சேவை இன்றியமையாதது. வாடகை, தேய்மானங்கள், காப்பீடுகள், சொத்து வரிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியன மாறுபடாத செலவில் அடங்கும். இயந்திர உதிரி பாகங்கள், பழுது பார்த்தல், அடையாளத் தாள்கள் மற்றும் தையல் ஊசிகள் மாறுபடும் செலவில் அடங்கும். பொருட்களின் நிர்வாகம், இயந்திரம் மற்றும் உபகரணங்களின் விலை, அரசு நிபந்தனைகளுக்கு ஆகும் செலவுகள் இதர செலவில் அடங்கும். விலை நிர்ணயித்தலின் நிலைகள் விலை நிர்ணயிக்கும் மேலாளர்கள் / நிர்வாகிகள் கீழ் காண்பவற்றை நிர்ணயம் செய்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட விலைக் கோட்டில் வடிவமைப்பின் உற்பத்தி வாய்ப்பு வடிவமைப்பின் இலாபத் திறன் மற்றொரு வடிவமைப்பை சேர்க்கும் சூழ்நிலை உருவாகுமா? உற்பத்தியை பல்வேறு நிலைகளில் பொருட்களின் விலையை கொண்டு நிர்ணயிக்கலாம். ஒரு பொருளை வடிவமைத்து உருவாக்கி மாதிரிகளை தயாரிப்பதற்கு முன் விலை நிர்ணயம் செய்வது பூர்வாங்கமான விலை நிர்ணயம் எனக் கூறலாம். வடிவமைத்தலுக்கு முன் விலை நிர்ணயிப்பது. உற்பத்திக்கு முன் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப வடிவமைப்பு நிலையில் விலை நிர்ணயிப்பது. உண்மையான விலையை உற்பத்தியின் போதும் உற்பத்திற்கு பின்னும் நிர்ணயிப்பது. வடிவமைப்பு உருவாக்கத்தின் பூர்வாங்க விலை நிர்ணயம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளின் விலையை அரைகுறையாக அல்லது குத்துமதிப்பாக நிர்ணயிப்பது. துணிகளின் தரம், விதம் மற்றும் தேவைப்படும் கெஜங்கள் (நீள அளவு) மற்றும் தேவைப்படும் எண்ணிக்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கத்தரிப்பு விலையை நிர்ணயிப்பதாகும். குறிப்பிட்ட விதத்தில் தயாரிக்கப்படும் உடைகளின் ஊழியர் சம்பளம் உற்பத்தியை கொண்டு கணக்கிடப்படும். வரிசையின் விலை நிர்ணயம் பொருட்களின் முதலீடு, நேரடி ஊழியர்களின் சம்பளம் போன்றவை தேவையான தொகையின் மூலம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளின் தனிப்பட்ட ஒன்றின் விலையை நிர்ணயிப்பதாகும். குறிப்பிட்ட பொருட்களை கண்டறிந்து, துணிகளின் ஜெகங்களை (நீள அளவு) சீரமைக்கப்பட வேண்டும். ஆடைகளை தயாரிக்க தேவைப்படும் கால அளவை கணக்கிட்டு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்யலாம். தொழில்நுட்ப வடிவமைப்பிற்கான விரிவான விலை நிர்ணயம் குறிப்பிட்ட வித ஆடைகளை தத்தெடுத்து உற்பத்தி வரிசைக்கு தயாராகும் போது விரிவான விலை நிர்ணயம் செய்யலாம். கவனக் குறைவால் விடப்பட்ட செலவினங்களை இதில் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, பொருட்களின் பெயர், தரம் மற்றும் அளவுகளை கொண்ட சீட்டு ஆகியவை தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள் வடிவமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து துணிகளின் தேவை அளவை குறைக்கும் போதும், சிக்கலான செயலாக்கத்தை எளிதுபடுத்தும் போதும் விலை நிர்ணயித்தலில் மாற்றம் செய்யலாம். உண்மையான விலை நிர்ணயத்தை கண்டறிதல் உற்பத்தியின் போது சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் மூலம் உண்மையான உற்பத்தி விலையை கண்டறியலாம். உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் தையற்தளத்தை அடைந்ததும் சில பொருட்களின் விலை மிகவும் கடமையாக இருப்பதையும், சில செயல்பாடுகளை பின்பற்றுவதற்கு அதிக கால நேரம் செலவிட நேர்வதையும் உற்பத்தி மேலாளர்கள் உணர்வார்கள். விலை மாற்றம் செய்து சரிகட்டும் போது பொருட்களின் உண்மையான விலையில் மாற்றம் உண்டாகலாம். உண்மையான விலையை உற்பத்தியின் போது முழுமையாக கவனிக்க வேண்டும். முடிவுரை வருங்காலம் தீர்க்கமாக குறைந்த அளவில் திறமை வாய்ந்த வாணிபர்களை எதிர்நோக்கியுள்ளது. நன்கு முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம், அனைத்து கருவிகள், வாங்கும் திறன் மற்றும் வாணிபர்கள் உதவியில் நன்முறையில் வளர்ந்துள்ளது. வங்கிகளில் உதவியாளர்கள், மேலாளர்களின் பணியில் தொழில்நுட்பம் உதவியுள்ளது போல் வாணிபத்திலும் தொழில்நுட்பம் ஆட்சி செய்கிறது. இது போன்று தான் வருங்காலத்தில் வாங்கும் திறனும், வாணிபர்களின் பணியும் அமையும். ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடநூல்