மேகியார் பிராக் (Magyar Frock) அறிமுகம் இவ்வுடை 1 முதல் 5 வரையுள்ள பெண் குழந்தைகள் அணியக் கூடிய உடையாகும். தோள் பகுதியும் கை பகுதியும் மடிப்பாக (fold) காணப்படும். இடுப்பு பகுதியில் பாவாடை அமைத்து தைக்கப்பட்டிருக்கும். கழுத்து பகுதியில் காலர் அல்லது பைப்பிங் அமைத்து தைக்கலாம். பொருத்தமான துணி வகைகள் பாப்லின், பூ போட்ட பருத்தி துணிகள், சில்க் மற்றும் பேன்ஸி ரக துணி வகைகள். தேவையான துணியின் அளவு உடையின் உயரத்தைப் போல் இரண்டு மடங்கும், மடிப்பிற்காக 5 செ.மீ. துணியும் தேவைப்படும். அளவுகள் மார்பு சுற்றளவு = 22" பாடியின் உயரம் = 9½’’ பாவாடையின் உயரம் = 12½’’ கை நீளம்= 2½’’ மேற்கை சுற்றளவு = 8” வரைமுறை (பாடி பகுதி) AB = CD = மூலாதார சதுரம் வரைந்து கொள்ளவும் AB = CD = மேல் பாடியின் உயரம் AC = BD = மார்பு சுற்றளவில் ¼ பாகம் AE = பின் கழுத்து அகலம் = 2” AF = முன் கழுத்து ஆழம் 3½’’ CH = கை நீளம் 2” CI = மேற்கை சுற்றளவில் ½ பாகம் CI -க்கு இணையாக HJ வரைந்து கொள்ளவும் CH = IJ சமம் HK = முன்னங்கை சுற்றளவு DL = ½’’ JK = ½’’ KL பக்க பாகத்தை I வழியாக இணைக்கவும் படத்தில் உள்ளது போல் EFCHKLBE = பின் பாகம் GFCHKLBG = முன் பாகம் SG = நேரிழை திசை பாவாடை பகுதி AB = CD = பாவாடை உயரம் + 1½’’ மடிப்பிற்கு AC = BD = சுருக்கத்திற்கு தேவையான இடுப்பின் சுற்றளவைப் போல் அகலம் SG = நேரிழை திசை 2 மடங்கு மாதிரி துண்டுகள் விளக்கம் தோள் பகுதி மடிப்பாக இருப்பதால் முன், பின் பாக துண்டுகள் இணைந்து காணப்படும். எனவே பாடி துண்டு - 1பாவாடை துண்டுகள் - 2 திறப்பிற்கு போதுமான பொய் துண்டு, கவ்வும் பட்டி துண்டுகள் - 2 கழுத்து பாகத்திற்கு கிராஸ் பீஸ் தைக்கும் முறை காகித மாதிரியை துணியின் மீது வைத்து பிரன்ச் சீம் (French Seam) தைப்பதற்கும் பாவாடையுடன் இணைப்பதற்கும் போதுமான இடம் விட்டு பாடி பகுதியை வெட்டி எடுத்தல். கை ஓரம் மடித்து ஹெம் செய்தல். பக்க பாகங்களை சேர்த்த பிரன்ச் சீம் (French Seam) தைத்தல். பின்புற கழுத்துப் பகுதியில் திறப்பு வெட்டி பொய் துண்டு, கவ்வும் பட்டி திறப்பு தைத்தல். கழுத்து ஓரத்தில் கிராஸ்பீஸ் கொடுத்து மடித்து ஹெம் செய்தல். இடுப்புச் சுற்றளவிற்கு ஏற்ப பாவாடை பகுதியை சுருக்கம் வைத்தோ, மடிப்புகள் அமைத்தோ பாடியுடன் இணைத்தல். பாவாடையின் கீழ் ஓரம் மடித்து தைத்து முடிக்கவும். யோக் ப்ராக் (Yoke Frock) அறிமுகம் இந்த உடையை 2 வயது முதல் 4 வயது வரையுள்ள பெண் குழந்தைகள் அணியலாம். உடையின் மேல் பகுதியை யோக் என்றும் கீழ்பாகத்தை பாவாடை (Skirt) என்றும் அழைக்கலாம். கழுத்து பகுதியில் நமக்கு விருப்பமான காலர் அல்லது பைப்பிங் தைக்கலாம். ஆம் ஹோல் பகுதியில் பப்ஸ்லீவ் வைத்து தைக்கப்பட்டு பார்பதற்கு மிக அழகான தோற்றம் தரக் கூடியது. நெஞ்சு பகுதியில் ஸ்மாக்கிங் அல்லது பூ சித்திர வேலை செய்யலாம். பொருத்தமான துணி வகைகள் மென்மையான பருத்தி துணிகள், அக்கோபா, பேன்ஸி ரக துணிகளை தேர்ந்தெடுக்கலாம். அளவுகள் மார்பு சுற்றளவு = 22" யோக் உயரம் = 4'' தோள் அகலம் = 10'' பாவாடை = 14'' கை நீளம் = 5'' மேற்கை சுற்றளவு = 10" வரைமுறை (யோக் பகுதி) AB = CD = யோக்கின் உயரம் AC = BD = யோக்கின் மார்பு சுற்றளவில் ¼ பாகம் AE = கழுத்து அகலம் 2” AF = பின் கழுத்து ஆழம் 1½’’ AG = முன் கழுத்து ஆழம் 2½’’ AH = தோள் அகலத்தில் பாதி HD =மேற்கை சுற்றளவில் ½’’ பாகம் BI=½’’ DI= யோக்கின் கீழ் வடிவம் FEHDIBF = முன் பாகம் GEHDIBG = பின் பாகம் SG = நேரிழை திசை பாவாடை பகுதி AB = CD = பாவாடையின் உயரம் + 1½’’ மடிப்பு AC = BD = சுருக்கத்திற்கு தேவையான அகலம் EF, GH = பாவாடையில் வெட்டப்பட்ட ஆம் ஹோல் வளைவு AF, CH =1” SG = நேரிழை திசை கை பகுதி AB = CD = கை நீளம் AC = BD = கையின் அகலத்தில் ½’’ பகுதி AE = வளைவு பகுதி EF = பக்க பாகம் கை உயரத்தில் ½ பாகம் DF = ½’’ மாதிரி துண்டுகள் விளக்கம் முன் பாக யோக் துண்டு - 1 பின் பாக யோக் துண்டுகள் - 2 ஸ்கேட் துண்டுகள் - 2 கை பகுதிகள் - 2 திறப்பு தைக்க பேசிங் துண்டு - 1 பைண்டிங் துண்டு - 1 கழுத்து பகுதிக்கு கிராஸ் பீஸ் துண்டுகள் தைக்கும் முறை முன், பின் யோக் பகுதிகளை தைப்பதற்கு போதுமான இடம் விட்டு வெட்டி எடுக்கவும். முன் பின் யோக் துண்டுகளின் தோள் பக்கங்களை இணைத்து தைக்கவும். பின் கழுத்தில் திறப்பு வெட்டி பொய் துண்டு, கவ்வும் பட்டி திறப்பு தைத்தல். ஸ்கேட் பகுதியில் யோக்கின் அளவிற்கு பொருத்தமான சுருக்கம் வைத்தல். யோக்குடன் இணைத்து தைத்தல் கையின் மேல் பகுதி, கீழ் ஓரங்களில் சுருக்கம் அமைத்து பைப்பிங் தைத்து பக்க பாகம் இணைத்து தைத்தல். தயார் செய்யப்பட்ட கை பகுதியை பாடி மற்றும் யோக்கில் வெட்டப்பட்டுள்ள ஆம் ஹோல் அளவிற்கு பொருத்தி தைத்தல். பாடியின் பக்க பாகங்களை இணைத்து கீழ் ஓரம் மடித்து தைத்து முடித்தல். ரவுண்ட் யோக்குடன் கூடிய வட்ட பாவாடை (Frock) அறிமுகம் இந்த உடையை 3 வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் அணியலாம். உடையின் மேல் பாடி பகுதியில் வட்ட வடிவமான யோக் வெட்டி எடுத்து மீண்டும் அதே இடத்தில் இணைத்து தைக்கப்பட்டிருக்கும். இடுப்பிலிருந்து முழங்கால் வரை அணியக் கூடிய வகையில் வட்ட பாவாடை (Umbrella Skirt) அமைத்து ஆம் ஹோல் பகுதியில் விருப்பமான கை அமைத்து தைத்துக் கொள்ளலாம். மிக அழகான உடையாகும். பொருத்தமான துணிகள் பருத்தி மற்றும் பூ சித்திரமுள்ள மென்மையான துணி வகைகள், பேன்சி ரக துணி வகைகளை தேர்ந்தெடுக்கலாம். தேவையான துணியின் அளவு உடையின் உயரத்தைப் போல் 2 மடங்கும் + கை நீளம் +10 செ.மீ. அளவுகள் மார்பு சுற்றளவு = 24'' பாடி உயரம் = 9½'' ஸ்கேட் உயரம் = 12½'' கை நீளம் = 3" தோள் நீளம் = 10'' மேற்கை சுற்றளவு = 9'' இடுப்பு சுற்றளவு = 51 செ.மீ. பாடி பகுதி ABCD = மூலாதார சதுரம் வரைந்து கொள்ளவும் AB = CD = பாடியின் உயரம் AC = BD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = பின் கழுத்து அகலம் 1½’’ AF = கழுத்து அகலம் 2½’’ AG = முன் கழுத்து ஆழம் 2½’’ AH = தோள் அகலத்தில் ½ பாகம் HI = மேற்கை சுற்றளவில் பாதி IJ = பக்க பாகம் DJ =½'' GF = KL வட்ட வடிவமாக வெட்டப்பட்ட யோக் பகுதி SG = நேரிழை திசை EFHIJBE = பின் பாகத் துண்டு GFHIJBG = முன் பாகத் துண்டு GFKL = வட்ட யோக் கையின் வரைமுறை AB = CD = கை நீளம் AE = வளைவு பகுதி EF = கை பக்க பாகம் AEFB = கை பகுதி பாவாடை வரைமுறை AB = CD = 4 ஆக மடிக்கப்பட்ட சம சதுரமான துணி EF = இடுப்புச் சுற்றளவில் ¼ பாகம் BC = கீழ் ஓர வட்ட பகுதி OD = இடைவெளிக் கோட்டை மடித்தும் வெட்டலாம் FC = EB = பாவாடை உயரம் மாதிரி துண்டுகள் விளக்கம் முன் பக்க துண்டு - 1 முன் பாடி துண்டில் வெட்டி எடுக்கப்பட்ட யோக் துண்டு - 1 பின் பக்க துண்டு - 2 கை துண்டு - 2 திறப்பிற்கு வேண்டிய துண்டுகள் கழுத்து முடிப்பதற்கான துண்டு பாவாடை பகுதி தைக்கும் முறை முதலில் பாடியின் மாதிரியை வைத்து தோள், பக்க பாகங்களில் போதுமான இடம் விட்டு வெட்டி எடுக்கவும். முன்புறம் வெட்டி எடுத்த யோக்கு பகுதியை மீண்டும் பாடி பகுதியோடு இணைக்கவும். (இரட்டை துணி பயன்படுத்தவும்) தோள் பக்க பாகங்களை சேர்த்து இணைக்கவும். தயார் செய்யப்பட்ட கை பகுதியை பாடி பகுதியுடன் இணைத்தல். பின் கழுத்தில் வெட்டப்பட்ட திறப்பை பொய் துண்டு, கவ்வும் பட்டி தைத்த பின் கழுத்து ஓரம் பைப்பிங் தைத்தல் வெட்டப்பட்ட வட்ட பாவாடையின் கீழ் ஓரம் சிறிதாக மடித்து தைத்த பின் பாடியின் இடுப்பு பகுதியுடன் சேர்த்து இணைத்து தைத்து முடித்தல். உடையை முறைப்படி மடித்து அழுத்தம் கொடுத்தல். அரை பாவாடை (Half Skirt) அறிமுகம் 5 வயது முதல் 10 வயது வரையுள்ள சிறுமிகள் அணியும் ஆடை ஆகும். இடுப்பிலிருந்து முழங்காலுக்கு சற்று கீழ் வரை அணியலாம். இடுப்பு பகுதியில் சாதாரண மடிப்பு அல்லது பெட்டி மடிப்பு வைத்து சுருக்கத்தின் மேல் பகுதியில் பட்டி வைத்து தைக்கப்படும். பள்ளி சீருடைகள் இம்முறையில் தைக்கப்படும். பொருத்தமான துணி வகைகள் சற்று தடிமனான பின்னி, காக்கி, டெரிகாட்டன், பாலியஸ்டர் போன்றவை உபயோகிக்கலாம். தேவையான துணியின் அளவு உடையின் உயரத்தைப் போல் 2 மடங்கும், கீழ் மடிப்பு மற்றும் பட்டிக்கு தேவையான துணி தேவைப்படும். அளவுகள் உயரம் = 19½ + 2” மடிப்பிற்கு வரைமுறை AB = CD = உடையின் உயரம் + மடிப்பிற்கு 2½’’ AC = BD = ½’’ இடுப்பும் 2 மடங்கும் SG = நேரிழை திசை மாதிரி துண்டுகள் விளக்கம் முன் பக்க துண்டு - 1 பின் பக்க துண்டு - 1 பட்டி துண்டு - 1 தைக்கும் முறை பாவாடை பகுதியை மடிப்பிற்கும் இடம் விட்டு வெட்டிக் கொள்ளவும் இரண்டு துண்டுகளின் உயரங்களை சேர்த்து இணைத்தல் இடுப்பின் இடது பக்க பாகத்தில் சமமான திறப்பு தைத்தல் இடுப்பின் சுற்றளவிற்கு ஏற்ப மடிப்புகள் வைத்தல் இடுப்பு பகுதியில் குறிப்பிட்ட அளவு அகலத்தில் பட்டி அமைத்தல் பக்க பாகங்களை இணைத்தல் உடையின் உயரத்தை அளந்து கீழ் ஓரம் மடித்து தைத்தல் தேவை ஏற்பட்டால் பக்க இணைப்பில் பாக்கெட் அமைக்கலாம். திறப்பை மூடி தைப்பதற்கு பேண்ட் ஹீக் பயன்படுத்தலாம் முறைப்படி அழுத்தம் கொடுத்து மடித்தல் பிளெயின் சட்டை (பாவாடைக்கு) Plain Blouse (For Skirt) அறிமுகம் சாதாரண சுருக்கம் உள்ள பாவாடை, அரை பாவாடை போன்ற உடைகளுக்கு மேல் சட்டையாக அணியலாம். சிறிய, பெரிய பெண் குழந்தைகள் அணியக் கூடிய உடையாகும். கை நம் விருப்பப்படி குட்டையாகவோ, நீளமாகவோ வைத்துக் கொள்ளலாம். பொருத்தமான துணிவகைகள் பருத்தி துணி, பட்டு, வெல்வெட், 2/2, வாயில்ஸ், அக்கோபா மற்றும் பேன்ஸி ரக துணி வகைகள் உபயோகிக்கலாம். தேவையான துணியின் அளவு உடையின் உயரம் + கை நீளம் இவற்றை போல் 2 மடங்கு + 10 செ.மீ. போதுமானது. அளவுகள் உயரம் = 15" மார்பு சுற்றளவு = 24" தோள் அகலம் = 11" கை சுற்றளவு = 10" கை நீளம் = 6" வரைமுறை (முன் துண்டு) ABCD = மூலாதார சதுரம் வரைந்து கொள்ளவும் AB = CD = உயரம் + 1½’’ மடிப்பிற்கு AC = BD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = முன் கழுத்து ஆழம் 3” AF = கழுத்து அகலம் 2½’’ AG = தோள் அகலத்தில் ½ பாகம் GH = மேற்கை சுற்றளவில் ½ பாகம் HD = HDஐ சமமாக பிரித்து I குறிக்கவும் IJ = ½’’ HJD = பக்க பாகம் EFGHJDBE = முன் பாக துண்டு SG = நேரிழை திசை வரைமுறை (பின் துண்டு) ABCD = உயரம் + 1½’’ மடிப்பிற்கு ACBD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = பின் கழுத்து ஆழம் 1½’’ AF= கழுத்து அகலம் 2½’’ AG = தோள் அகலத்தில் ½ பாகம் GH = மேற்கை சுற்றளவில் ½ பாகம் HD = HD ஐ சமமாக பிரித்து I குறிக்கவும் IJ = ½’’ HID = பக்க பாகம் EFGHJDBE = பின் பாக துண்டு SG = நேரிழை திசை வரைமுறை (கை பகுதி) AB = கை நீளம் + 1” மடிப்பிற்கு AC = BD = கை சுற்றளவில் ½ பகுதி CE = 1/8 பாக மார்பு சுற்றளவு EF = பக்க பாகம் DF = ½’’ மாதிரி துண்டுகள் விளக்கம் பின்பக்க துண்டு -1 முன்பக்க துண்டுகள் - 2 கை துண்டுகள் - 2 பொய் துண்டு, கவ்வும் பட்டி திறப்பிற்கு 2 துண்டுகள் கழுத்து பகுதிக்கு குறுக்குத் துண்டு தைக்கும் முறை மாதிரியின் படி இணைப்பிற்கு போதுமான அளவு துணி விட்டு வெட்டிக் கொள்ளுதல். முன், பின் பக்கங்களின் தோள் பகுதியை சேர்த்து இணைத்தல். முன், பின் பக்கத்தில் முழு நீள டார்ட்ஸ் அமைத்து பக்க பாகங்களை சேர்த்து தைத்தல். முன் பக்கம் நீண்ட திறப்பு வெட்டி பேசிங், பைண்டிங் திறப்பு தைத்தல். கழுத்து பகுதியில் கிராஸ் பீஸ் கொடுத்து மடித்து தைத்தல். தயார் செய்து வைக்கப்பட்டுள்ள கை பகுதியை பாடியுடன் சேர்த்த இணைத்தல். கீழ் ஓரம் போதுமான அளவு மடித்து தைத்தல். திறப்பு பகுதியில் அமுக்குப் பொத்தான் அல்லது கொக்கியும் காதும் வைத்து ஆடையை தைத்து முடித்தல். சாதா சோளி (Choli) அறிமுகம் சற்று வயதான பெண்மணிகள் அணியும் உடையாகும். இடுப்பு வரை அணிய கூடியது. இடுப்பு பகுதியில் சம அளவில் பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும். பொருத்தமான துணி வகைகள் பருத்தி, வாயில்ஸ், 2/2 போன்ற மென்மையான துணி வகைகள். ப்ளென் அல்லது வெள்ளை நிற துணிகள் தேர்ந்தெடுக்கலாம். தேவையான துணியின் அளவு உடையின் உயரம் + கை நீளம் இவற்றைப் போல் 2 மடங்கும் + 10 செ.மீ. அளவும். அளவுகள் உயரம் = 14” மார்பு சுற்றளவு = 30” தோள் அகலம் = 13” கை சுற்றளவு = 11” கை நீளம் = 8” இடுப்பு சுற்றளவு = 25” வரைமுறை (முன் துண்டு) ABCD = மூலாதார சதூரம் வரைந்து கொள்ளவும் AB = CD = உயரம் + 1½’’ மடிப்பிற்கு AC= BD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = முன் கழுத்து ஆழம் 4” AF = கழுத்து அகலம் 3” AG = தோள் அகலத்தில் பாதி ½’’ பாகம் GH =1/6 பாக மார்பு சுற்று+1” DI = 1” HI = பக்க பாகம் EFGHIBE = முன் பாக துண்டு வரைமுறை (பின் துண்டு) AB = CD = உயரம் + 1½’’ மடிப்பிற்கு AC = BD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = பின் கழுத்து ஆழம் 3” AF = கழுத்து அகலம் 3” AG = தோள் அகலத்தில் பாதி ½ பாகம் GH =1/6 பாக மார்பு சுற்று + 1” DI= 1" HI = பக்க பாகம் EFGHIBE = பின் பாக துண்டு கையின் வரைமுறை AB = கை நீளம் + 1” மடிப்பிற்கு AC = BD = கை அகலத்தில் ½ பாகம் CE = 2½’’ AE = வளைவு பகுதி EF = பக்க பாகம் DF = 1'' மாதிரி துண்டுகள் விளக்கம் பின் பாக உடல் துண்டு - 2 முன் பாக உடல் துண்டு -1 கை பாக துண்டுகள் - 2 திறப்பு மற்றும் கழுத்து தைப்பதற்கு போதுமான துண்டுகள் தைக்கும் முறை மாதிரியின் உதவி கொண்டு தைப்பதற்கு போதுமான இடம் விட்டு பாடி மற்றும் கை பகுதிகளை வெட்டிக் கொள்ளவும். முன், பின் பாடி பகுதிகளை ஒன்று சேர்த்து தோள் பக்கங்களை இணைத்து தைக்கவும். முன் துண்டில் 3 டார்ட்ஸ்களும் பின் பாடி பகுதியில் 2 அரை டார்ட்ஸ் தைக்கவும். பக்க பாகங்களை சேர்த்து இணைக்கவும். கையின் கீழ் ஓரம் மடித்து தைத்த பின் பக்க பாகங்களை சேர்த்து இணைக்கவும். தயார் செய்து வைக்கப்பட்டுள்ள கை பகுதியை பாடியுடன் சேர்த்து இணைத்து தைக்கவும். முன் பக்க பாகத்தில் பொய் துண்டு, கவ்வும் பட்டி திறப்பு தைக்கவும். இடுப்புப் பகுதியில் 1½’’அளவுள்ள பட்டி அமைத்து தைத்தல். கழுத்து ஓரத்திற்கு கிராஸ் பீஸ் கொடுத்து மடித்து தைத்து முடிக்க வேண்டும். திறப்பை மூடி அமைக்க கொக்கியும் காதும் பயன்படுத்தலாம். கட் சோளி (Cut Choli) அறிமுகம் இது பெண்கள் அணியும் உடையாகும். புடவை அணியும் போது இந்த சோளி பயன்படுகிறது. உடலுக்கு பொருத்தமான முறையில் அணிய வேண்டும். பொருத்தமான துணி வகைகள் வாயில்ஸ், பருத்தி, பட்டு, வெல்வெட், பிரிண்டெட் சில்க், அக்கோபா அம்பர், 2/2 போன்ற அனைத்து வகை துணிகளையும் பயன்படுத்தலாம். தேவையான துணியின் அளவு உடையின் உயரம் + கை நீளம் போல் 2 மடங்கும் + 5 செ.மீ. அளவுள்ள துணி தேவைபடும். அளவுகள் உயரம் = 14 + 1½’’ மடிப்பிற்கு மார்பு சுற்றளவு = 30” தோள் அகலம் = 13” இடுப்பு சுற்றளவு = 25” கை சுற்றளவு = 11” கை நீளம் = 8” வரைமுறை (முன் பாகம்) ABCD = மூலாதார சதுரம் AB = CD = உயரம் + கிராஸ் பெல்ட் (பட்டி) AC = BD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = முன் கழுத்து ஆழம் 4” AF = கழுத்து அகலம் 3” AG = தோள் அகலத்தில் ½’’ பாகம் GH =1/6 பாக மார்பு சுற்று+1” DI= 1” JB -KI = பட்டித்துண்டு HKI = பக்க பாகம் EFGHKJE = முன் பாக துண்டு JKIB = பட்டி துண்டு SG = நேரிழை திசை குறிப்பு முன் பாகத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பட்டியை முன்புற டார்ட்ஸ் தைத்த பிறகு மீண்டும் பட்டியை இணைத்து விடவும். வரைமுறை (பின் பாகம்) AB = CD = உயரம் + 1½’’ மடிப்பிற்கு AC = BD = மார்பு அகலத்தில் ¼ பாகம் AE = பின் கழுத்து ஆழம் 2½’’ AF = கழுத்து அகலம் 3” AG = தோள் அகலத்தில் பாதி ½ பாகம் GH =1/6 பாக மார்பு சுற்று + 1'' DI= 1” HI = பக்க பாகம் SG = நேரிழை திசை EFGHIBE = பின் பாக துண்டு வரைமுறை (கை பாகம்) முன் பக்க பாடி பகுதி - 2 கிராஸ் பெல்ட் (பட்டி) - 4 துண்டுகள் பின் பக்க பாடி பகுதி - 1 கை பகுதி - 2 துண்டுகள் திறப்பு மற்றும் கழுத்து ஓரத்திற்கு தேவையான துண்டுகள் தைக்கும் முறை மாதிரியின் உதவி கொண்டு தைப்பதற்கு போதுமான இடம் விட்டு பாடி பகுதிகள் மற்றும் கை பகுதிகளை வெட்டி எடுத்தல். முன் பாக பாடி துண்டில் இருந்து கிராஸ் பெல்ட் (பட்டி) பகுதியை வெட்டி எடுத்து கீழ் ஓரம் மட்டும் தைத்து வைத்தல். முன் பக்க பாடி பகுதியில் படத்தில் உள்ளது போல் டார்ட்ஸ் அமைத்து தைத்தல். மீண்டும் பாடி பகுதியில் பட்டியை வைத்து இணைத்தல். திறப்பு பகுதியில் பொய் துண்டு, கவ்வும் பட்டி தைத்தல். முன் பின் பாடி பகுதிகளை ஒன்று சேர்த்து தோள் பக்கங்களை இணைத்து தைத்தல். பின் பாக பாடி பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு ½ டார்ட்ஸ் அமைத்து தைத்தல். பக்க பாகங்களை போதுமான இடம் விட்டு இணைக்கவும். கை துண்டுகளின் கீழ் ஓரம் மடித்து ஹெம் செய்த பின் பக்க பாகங்களை சேர்த்து இணைத்தல். தயார் செய்யப்பட்ட கை பகுதியை பாடியுடன் சேர்த்து இணைத்தல். கழுத்து ஓரம் குறுக்கு துண்டு கொடுத்து மடித்து ஹெம்மிங் தையல் தைக்கவும். முடிக்கப்பட்ட ஆடையின் திறப்பு பகுதியில் கொக்கியும் காதும் அமைத்து தைத்தல். ஆதாரம்: தமிழ்நாடு அரச பாடநூல்